சுலோச்சனா காட்கில்

சுலோச்சனா காட்கில் (Sulochana Gadgil) பெங்களூரிலுள்ள இந்திய வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையத்தில் பணிபுரியும் வானியல் ஆராய்ச்சியாளர் ஆவார்.[1] பருவக் காற்று ஏன், எவ்வாறு ,அடிக்கடி மாறுகிறது என்பதையும், மழை வீழ்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பரிணாம நிகழ்வுகள் ஆகியவற்றை சமாளித்து விவசாய உத்திகள் பெருக்குவதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபடுகிறார். அவரது ஆராய்ச்சி பருவ கால மேகம் மற்றும் துணை பருவகால மாறுபாடு ஆகியவற்றின் அடிப்படை அம்சத்தை கண்டுபிடிக்க வழிவகுத்தது.[2] பருவமழை என்பது நிலம் மற்றும் கடல் சார்ந்து எழும்பும் காற்று மட்டுமல்ல, மாறாக பருவகால அளவிலான நிலப்பரப்பும், பருவகால இடம்பெயர்வும் ஒரு வெளிப்பாடாகும். விவசாயிகளுடன் இணைந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் மழைவீழ்ச்சியின் மாறுபாட்டிற்கு ஏற்றவாறு விவசாயத்தை பெருக்குவதற்கான வழிகளை ஆராய்கிறார்.[3]

சுலோச்சனா காட்கில்
தேசியம்இந்தியா
துறைகடலியல், வானியல்
கல்வி கற்ற இடங்கள்புனே பல்கலைக்கழகம்
துணைவர்மாதவ் காட்கில்

இளமை வாழ்க்கை

1944 ஆண்டு புனேவில் பிறந்தார். கடுமையான வறட்சியில் மக்களுக்கு உதவியதற்காக அறியப்பட்ட டோங்க் மாநிலத்தின் அமைச்சர் என்ற பெருமைக்குரிய வம்சாவழியிலிருந்து வந்தவர். இவரது தாத்தாவும் அப்பாவும் மருத்துவர்களாக பணிபுரிந்துள்ளனர். அதே நேரத்தில், இவரது தாத்தா ஒரு சுதந்திர போராளியாகவும் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக பல தீவிரமான போராட்டத்தில் பங்கேற்பாளராக இருந்துள்ளார். இவரது தாய் ஒரு மராத்தி எழுத்தாளர் ஆவார்.[4]

புனேவில் ஆரம்பக் கல்வியை மராத்திய மொழியில் பயின்றுள்ளார், பின்னர், ஆந்திர பிரதேசத்தில் உள்ள "ரிஷி வேலி" என்ற பள்ளியில் தங்கி பயின்றுள்ளார். பின்னர் புனே திரும்பி வந்து பெர்குசன் கல்லூரியில் இயற்கை அறிவியல் , வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை பயின்றார். இந்த சமயத்தில் மாதவ் காட்கில் என்பவருடன் சேர்ந்து விஞ்ஞான வாழ்க்கை யைத் தொடர முடிவு செய்தனர். அவர்கள் இருவரும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டனர்,[4]

மீண்டும் இந்தியாவில்

1971 வாக்கில் தனது கணவருடன் இந்தியா திரும்பினார். இந்திய வெப்ப மண்டல வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் இரண்டாண்டுகள் பணி புரிந்த்தார். இக்காலத்தில் ஆர். அனந்தகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். ஷிகா போன்ற ஆராய்ச்சியாளர்களுடன் பணிபுரிந்துள்ளார். விஞ்ஞான ஆராய்ச்சிக்கான மையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவரது கணவரும் ஒரு கணித சுற்றுச்சூழல் நிபுணராகவும் பணிபுரிந்தார். இங்கே ஒரு வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

குடும்ப வாழ்க்கை

சுற்றுச்சூழல் நிபுணரான மாதவ் காட்கில் என்பவரைத் திருமணம் புரிந்து கொண்ட இவருக்கு ஒரு மகள்,ஒரு மகன் உண்டு.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சுலோச்சனா_காட்கில்&oldid=25550" இருந்து மீள்விக்கப்பட்டது