சுரேஷ் கிருஷ்ணா (இயக்குநர்)

சுரேஷ் கிருஷ்ணா (Suresh Krissna) இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார். சத்யா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.[1] இவர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா ஆகியவற்றை இயக்கியுள்ளார்.[2]மோகன்லால், விஷ்ணுவர்தன், சிரஞ்சீவி, சல்மான் கான், வெங்கடேஷ் மற்றும் உபேந்திரா போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

சுரேஷ் கிருஷ்ணா
Suresh Krissna
Suresh Krissna at the Masala Padam Audio & Trailer Launch.jpg
பிறப்புமும்பை, இந்தியா
பணிஇயக்குனர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988 - தற்போது
வாழ்க்கைத்
துணை
சந்திரா சுரேஷ் (m. 1989)
உறவினர்கள்சாந்தி கிருஷ்ணா (தங்கை)
வலைத்தளம்
http://www.sureshkrissna.in/blog/

கே. பாலச்சந்தர் அவரிடம் இந்தி மொழியில் நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்த ஏக் தூஜே கே லியே, ஜரா சி ஜிந்தகி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 1988 ஆம் ஆண்டில் கமல்ஹாசன் சொந்தமாக தயாரித்த சத்யா எனும் படத்தில் இயக்குநராக அறிமுகப்படுத்தினார். மீண்டும் தெலுங்கு மொழியில் இந்திருடு சந்திருடு எனும் படத்தை இயக்க வாய்ப்பு வழங்கினார். இந்த திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பின்னாளில் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பெரும் இயக்குநராக உருவாகினார்.

இயக்கிய படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்