சுயமரியாதை (திரைப்படம்)

சுயமரியாதை (Suyamariyadhai) என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். விஜயகனேஷ் இயக்கிய இப்படத்தில், கார்த்திக், பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர். கே. ராமகிருஷ்ணன் தயாரித்த இப்படத்திற்கு சிவாஜி ராஜாவின் இசை அமைத்துள்ளார். படமானது 1992 ஜூலை 24 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

சுயமரியாதை
இயக்கம்ஆர். விஜயகனேஷ்
தயாரிப்புஆர். கே. ராமகிருஷ்ணன்
கதைஆர். விஜயகனேஷ்
இசைசிவாஜி ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். கேசவன்a
படத்தொகுப்புபி. ஆர். சண்முகம்
கலையகம்சிறீ வடிவுடை அம்மன் கிரியேசன்ஸ்
வெளியீடுசூலை 24, 1992 (1992-07-24)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

விஜய் ( கார்த்திக் ) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. குற்றவாளி முத்துகருபனைக் பிடிக்க முயற்சிக்கிறான். முத்துக்கருபன் இப்போது விடுதி மேலாளராக மாறி ஜே. கே என்ற பெயரில் அறியப்படுகிறான். குற்றவாளியின் பங்குதாரராக ஊழல்வாதியான காவல் அதிகாரி ஜெயராஜ் (செந்தாமரை) உள்ளார். விஜயும், ரேகாவும் ( பல்லவி ) ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இதற்கிடையில், அவன் ராஜ் (ராஜ்திலக்) உடன் நட்பு கொள்கிறான்.

கடந்த காலங்களில், திருமணமாகாத பிரபல பாடகியான விஜயின் சகோதரி துர்கா ( கே. ஆர். விஜயா ) தனது உடன்பிறப்புகளான பவானியையும், விஜயையும் அழைத்து வந்தார். ஒரு நாள் துர்காவால் அவமானப்படுத்தப்பட்ட ஜெயராஜ், அவளை சிறைக்கு அனுப்பி பழிவாங்கினார். இதனால் பவானியின் திருமணம் ரத்து செய்யப்படுகிறது. பின்னர் பவானி தற்கொலை செய்து கொள்கிறாள்.

ரேகா ஜெயராஜின் மகள் என்பதை விஜய் பின்னர் புரிந்துகொள்கிறான். ஜெயராஜ் தனது மகளை விஜயக்கு திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொள்கிறார், ஆனால் அவருக்கு விஜயை அடையாளம் தெரியவில்லை. எனவே, துர்காவின் அடையாளத்தை விஜய் மறைக்கிறார். ஒரு நாள், ஜெயராஜ் தனது மகளை விபச்சார விடுதியில் கண்டுபிடிக்கிறார். ஏனெனில் அது விஜயின் சதித்திட்டம்.

விஜயுடன் பணிபுரிந்த ராஜ் இரகசிய உளவாளியாக மாறிவிடுகிறார். விஜயும் ராஜும் இதயமற்ற முத்துக்கருபனைக் கொல்ல திட்டமிடுகின்றனர்.

நடிகர்கள்

இசை

திரைப்படத்திற்கான பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் சிவாஜி ராஜா மேற்கொண்டார். 1992 இல் வெளியிடப்பட்ட இந்த இசைப்பதிவில், செங்குட்டுவன், வாலி ஆகியோர் எழுதிய நான்கு பாடல்கள் உள்ளன.

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 'ராகம் தாளம்' பி. சுசீலா 4:26
2 'வா மா வா' எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 4:10
3 'வானம்பாடி நானே' சந்திரன், ரேணுகா தேவி 3:22
4 'வன்மேடு மேகம்' கார்த்திக், மலேசியா வாசுதேவன் 3:28

வரவேற்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது "பாடல் காட்சிகளைத் தவிர இந்த படத்தில் பார்வையாளர்கள் பார்க்க எதுவும் இல்லை".[3]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுயமரியாதை_(திரைப்படம்)&oldid=33486" இருந்து மீள்விக்கப்பட்டது