சுமங்கலி (1983 திரைப்படம்)

சுமங்கலி (Sumangali) என்பது 1983 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைபடமாகும். இப்படத்தை டி. யோகானந்த் இயக்கி, தயாரித்தார். இதில் சிவாஜி கணேசன், சுஜாதா, பிரபு, கீதா ஆகியோர் நடித்தனர். இப்படம் இந்தி திரைப்படமான ஆஷா (1980) என்பதன் மறு ஆக்கமாகும். படம் 1983 ஆகஸ்ட் 12 அன்று வெளியானது.[1]

சுமங்கலி
திரையரங்கு வெளியீட்டு சுவரிதழ்
இயக்கம்டி. யோகானந்த்
தயாரிப்புடி. யோகானந்த்
கதைஆரூர்தாஸ் (உரையாடல்)
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சுஜாதா
பிரபு
கீதா
ஒளிப்பதிவுஜி. ஓர். நாதன்
படத்தொகுப்புஆர். விட்டல்
கலையகம்அலங்கார் பிலிம்ஸ்
வெளியீடுஆகத்து 12, 1983 (1983-08-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

இளங்கலை பட்டதாரியான ராமு சுமையுந்து ஓட்டி பிழைப்பு நடத்திவருகிறார். ஒரு பயணத்தின் போது பாடகி/நடனக் கலைஞர் ரூபாதேவியை சந்திக்கிறார். விரைவில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர். அனாதையான ரூபாதேவி ராமுவை காதலிக்கிறாள். ஆனால் ராமு துளசியை காதலிக்கிறார் என்பதை அறிந்ததும் பின்வாங்குகிறாள். ராமுவின் முதலாளி, விநாயகம் ராமுவுக்கு தன் மகள் லட்சுமியை திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். ஆனால் ராமுவோ துளசியைத் திருமணம் செய்துகொள்கிறார். இதனால் விநாயகம் கோபமடைந்து, ராமுவின் அடுத்த பயணத்தில் அவரின் உயிரைப் பறிக்க ஏற்பாடு செய்கிறார். ராமு அதிலிருந்து தப்பிக்கிறார், ஆனால் அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் கருதுகின்றனர். ராமுவின் தாய் தன் மகனின் மரணத்திற்கு துரதிர்ஷ்டம் பிடித்த துளசி தன் வீட்டிற்கு மருமகளாக வந்ததே காரணம் என்று குற்றம்சாட்டி கொடுமை செய்கிறார். இதனால் விரக்தியடைந்த துளசி தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அதன் பிறகு அவள் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது. ராமு வீடு திரும்பும்போது, துளசி குறித்த அறிந்து மனம் உடைந்து விரக்தியில் வெளியேறுகிறார். ரூபா அவருக்கு ஆறுதலாக இருந்து, அவரது மனச்சோர்வைப் போக்குவதற்கான ஒரு வழியாக தன்னுடன் பாடவைத்து அவரை அமைதிப்படுத்துகிறாள்.

இதற்கிடையில், துளசி அவளின் தற்கொலை முயற்சிக்குப் பிறகு கோயில் பூசாரி ஒருவரால் காப்பாற்றப்படுகிறாள். இதில் அவளது பார்வைபறிபோகிறது. மேலும் அவள் கர்ப்பமாக இருப்பதையும் உணர்கிறாள். சாமியாரும், அவரது மனைவியும், மற்றொரு அனாதை இளைஞரான பிரகாஷ் என்பவரும் ஒரு குடும்பமாக மாறுகின்றனர். துளசிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ராமு விரும்பியபடி குழந்தைக்கு ராமதுளசி என்று பெயரிடுகின்றாள். அறுவை மூலம் துளசிக்கு பார்வை திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்க பிரகாஷ் கல்கத்தா செல்கிறான். குடும்பத்திற்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்காக ராமதுளசி வீடு வீடாக பொம்மைகளை விற்கிறாள். அவ்வாறு பொம்மைகளை அவள் விற்கும் போது ராமுவையும், ரூபாவையும் சந்திக்கிறாள். இருவருக்கும் அவளைப் பிடித்துவிடுகிறது. ராமுவும் ரூபாவும் இப்போது மிகவும் வெற்றிகரமான கலைக் குழுவினராக இருக்கின்றனர். இந்நிலையில் பல ஆண்டு துக்கத்திற்குப் பிறகு, ராமு ரூபாவை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறார். புதிதாக திருமணம் செய்துகொள்ள இருக்கும் தம்பதியினர் ராமதுளசியிடம் ஈர்க்கப்பட்டு, அவளது தாயின் கண் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்தைச் செலுத்த முன்வருகிறனர். ரூபாவும் துளசியும் தோழிகளாகின்றன். ஆனால் ராமு சூழ்நிலையால் துளசியைப் பார்க்க இயலாமல் போகிறது. அறுவை சிகிச்சை முடிந்து துளசிக்கு பாரவை திரும்பும்போது ரூபா அவள் அருகிளேயே இருக்கிறாள். துளசி ரூபாவின் திருமணத்தின்போது அவள் அருகில் இருப்பதாக உறுதியளிக்கிறாள். திருமணத்தின் போது ராமுவை அடையாளம் கண்டுகொண்ட துளசி ரூபாவின் வாழ்க்கையைக் கெடுக்க விரும்பாமல் ஓடிவிடுகிறாள். துளசி உயிரோடு இருப்பதை ராமு விரைவில் அறிந்துகொள்கிறார். இப்போது தனது வாழ்க்கையின் திசை குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார். என்ன முடிவை எடுக்கிறார் எப்பதே கதையாகும்

நடிகர்கள்

பாடல்

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[2][3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "எங்கப்பனுக்கும்"  எல். ஆர். ஈசுவரி  
2. "எதிர்காலம் ஒளிவீசும்"  டி. எம். சௌந்தரராஜன்  
3. "இசை பாடும் பறவை"  வாணி ஜெயராம்  
4. "இது கலைஞர்கள் உலகம்"  டி. எம். சௌந்தரராஜன், குழுவினர்  
5. "ஓஹோஹோ ரசிகர்களே"  டி. எம். சௌந்தரராஜன், குழுவினர்  

வரவேற்பு

கல்கியின் ஜெயமான்மாதான் படம் காலாவதியானது என்று குறிப்பிட்டார்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுமங்கலி_(1983_திரைப்படம்)&oldid=33477" இருந்து மீள்விக்கப்பட்டது