சுப்பிரதீபக் கவிராயர்

சுப்பிரதீபக் கவிராயர் (English: Supradeepa Kavirayar) என்பவர், 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். மதுரையைச் சேர்ந்தவர். தேம்பாவணி என்னும் நூலை எழுதியதாகக் கருதப்படும் வீரமாமுனிவர் என அறியப்படும் கிறித்தவப் பாதிரியாரான கான்சுடன்டைன் சோசேப்பு பெசுக்கி என்பவருக்குத் தமிழ் கற்பித்தவர் இவரே. தேம்பாவணியின் கதையை வீரமாமுனிவர் சொல்ல, அதைப் பாடலாக எழுதியவர் சுப்பிரதீபக் கவிராயரே என்ற கருத்தும் உண்டு. வீரமாமுனிவரின் தூண்டுதலால் இவர் கிறித்தவராக மதம் மாறினார்.[1][2]

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலக்கோட்டையை ஆண்ட பாளையக்காரரான கூளப்பநாயக்கரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கூளப்பநாயக்கன் காதல், கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.[3]

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=சுப்பிரதீபக்_கவிராயர்&oldid=17033" இருந்து மீள்விக்கப்பட்டது