சுபா சீனிவாசன்

சுபா சீனிவாசன், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் துடுப்பாட்ட வீரராவார், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய துடுப்பாட்ட அணிக்காக விளையாடிவருகிறார். [1] ஜூலை 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற, 2018 ஐசிசி மகளிர் உலக இருபது20 தகுதிப் போட்டிக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் முதன்முதலாக இவர் இடம் பெற்றுள்ளார். [2] தொடர்ந்து 7 ஜூலை 2018 அன்று பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் நெதர்லாந்து பெண்கள் தேசிய துடுப்பாட்ட அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடியுள்ளார்.

சுபா சீனிவாசன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுபா சீனிவாசன்
பிறப்பு8 மார்ச்சு 1980 (1980-03-08) (அகவை 44)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை நடுத்தர வேகம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி [[ஐக்கிய அரபு அமீரகம் women Twenty20 துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்|11]])7 ஜூலை 2018 எ. நெதர்லாந்து
கடைசி இ20ப23 நவம்பர் 2021 எ. ஹாங்காங்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1999–2009தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெண்கள் பன்னாட்டு இருபது20
ஆட்டங்கள் 18
ஓட்டங்கள் 67
மட்டையாட்ட சராசரி 6.70
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 22
வீசிய பந்துகள் 348
வீழ்த்தல்கள் 21
பந்துவீச்சு சராசரி 11.19
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 3/2
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/0
மூலம்: Cricinfo, 12 ஜனவரி 2023

ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை

சுபா, 1980 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி சென்னையில் பிறந்துள்ளார். சிறுவயதிலிருந்தே தனது இரட்டை சகோதரர் சுந்தருடன் இணைந்து தெருக்களில் மட்டைப்பந்து விளையாடி வந்துள்ள இவர், கல்லூரி நாட்களில் சென்னை பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார். மேலும் பத்தொன்பது வயதிற்குட்பட்ட போட்டிகளில் தமிழக மகளிர் அணியிலும் சேர்ந்து விளையாடியுள்ளார். அதே நேரத்தில் விளையாட்டோடு சேர்ந்து படிப்புக்கும் இணையான முக்கியத்துவம் கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் .[3]

2009 ஆம் ஆண்டில் ஆர் சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார் சுபா. இத்தம்பதியருக்கு அக்சயா மற்றும் அக்சரா என்ற இரு குழந்தைகள் இருக்கிறார்கள். குடும்பமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார்கள். [4]

உள்நாட்டில் விளையாட்டு

தமிழ்நாடு பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக இவரது பத்தொன்பதாம் வயதிலே தேர்வு செய்யப்பட்டுள்ள சுபா, 1999 ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை, மாநிலங்களுக்கு இடையிலான, மண்டலங்களுக்கு இடையிலான, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மற்றும் ரயில்வேக்கு இடையேயான துடுப்பாட்ட போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக கலந்து கொண்டு விளையாடியுள்ளார். 2004 ஆம் ஆண்டில்  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சுபாவை காவல் துணை ஆய்வாளராக நியமித்தது. சுபா, திருமணம் வரை அந்த பணியில் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சுபா_சீனிவாசன்&oldid=25615" இருந்து மீள்விக்கப்பட்டது