சுனில் கங்கோபாத்யாயா

சுனில் கங்கோபாத்யாயா (Sunil Gangopadhyay) அல்லது சுனில் கங்குலி (Bengali: সুনীল গঙ্গোপাধ্যায় Shunil Gônggopaddhae, செப்டம்பர் 7, 1934 – அக்டோபர் 23, 2012[1][2][3]) ஓர் இந்திய வங்காள மொழிக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.[4] தற்போது வங்காள தேசத்தில் உள்ள ஃபரீத்பூரில் பிறந்த கங்கோபாத்யாயா வங்காள இலக்கியத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றவர். 1953இல் தம்முடைய சில நண்பர்களுடன் கிருத்திபாஸ் என்ற வங்காள கவிதை இதழ் ஒன்றை துவக்கினார். பின்னர் பல்வேறு பிரசுரங்களுக்கு தமது ஆக்கங்களை எழுதியுள்ளார்.

சுனில் கங்கோபாத்யாயா
Sunil Gangopadhyay taken by Ragib.jpg
இயற்பெயர் சுனில் கங்கோத்யாயா
பிறந்ததிகதி (1934-09-07)செப்டம்பர் 7, 1934
பிறந்தஇடம் பரீத்பூர், வங்காளம், பிரித்தானிய இந்தியா (தற்கால வங்காளதேசம்)
இறப்பு அக்டோபர் 23, 2012(2012-10-23) (அகவை 78)
புனைபெயர் நீல் லோகித், சனாதன் பதக், மற்றும் நீல் உபாத்யாயா[1]
பணி எழுத்தாளர்
தேசியம் இந்தியன்
குடியுரிமை இந்தியன்
கல்வி முதுகலை பட்டம் (வங்காள இலக்கியம்)
கல்வி நிலையம் கொல்கத்தா பல்கலைக்கழகம் (1954)
காலம் 1953–2012
குறிப்பிடத்தக்க விருதுகள் ஆனந்தா புரஸ்கார் (1972, 1989)
சாகித்திய அகாதமி விருது (1985)
துணைவர்
சுவாதி பண்டோபாத்யாயா (தி. 1967)
பிள்ளைகள் சௌவிக் கங்கோபாத்யாயா (பி. 1967)

காகாபாபு என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி பல புதினங்களை தொடர்ந்து எழுதினார்; இத்தொடர்கள் சிறுவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அந்த நாட்கள் (செய் சமோய்) என்ற தமது புதினத்திற்கு 1985ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது பெற்றார்.[5] நீல் லோகித், சனாதன் பதக், மற்றும் நீல் உபாத்யாயா என்ற புனைபெயர்களில் அவர் எழுதி வந்தார்.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "Bengali writer Sunil Gangopadhyay dies of a heart attack at 78". IBNLive. 23 October 2012 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023225503/http://ibnlive.in.com/news/bengali-writer-sunil-gangopadhyay-dies-of-a-heart-attack-at-78/301744-40-103.html. பார்த்த நாள்: 23 October 2012. 
  2. "Eminent Bengali writer Sunil Gangopadhyay passes away". Bengal Newz. 2008-02-20. பார்க்கப்பட்ட நாள் 2012-10-23.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Eminent litterateur Sunil Gangopadhyay passes away at his Kolkata residence". பார்க்கப்பட்ட நாள் 23-10-2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Sunil Gangopadhyay". LIbrary of Congress. பார்க்கப்பட்ட நாள் 23 October 2012.
  5. Ruth Vanita; Saleem Kidwai (22 September 2001). Same-Sex Love in India: Readings from Literature and History. Palgrave Macmillan. pp. 336–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-29324-6. பார்க்கப்பட்ட நாள் 23 October 2012.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=சுனில்_கங்கோபாத்யாயா&oldid=18992" இருந்து மீள்விக்கப்பட்டது