சுனிதா (நடிகை)
வித்யா ஸ்ரீ என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 1986 முதல் 1996 வரை தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டர்.
வித்யா ஸ்ரீ' | |
---|---|
பிறப்பு | சுனிதா சிவராமகிருஷ்ணன் 23 சூலை 1972 ஆந்திரப் பிரதேசம் |
மற்ற பெயர்கள் | கோடை மழை வித்யா, வித்யா ஸ் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1986-1996 |
வாழ்க்கைத் துணை | ராஜ் (தி.1996-தற்போது வரை) |
பிள்ளைகள் | செசாங் (பி.1998) |
திரைப்பட வாழ்க்கை
முக்தா எஸ். சுந்தர் இயக்கி 1986 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான கோடை மழை திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் நுழைந்தார். அப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, ரஜினிகாந்த் (முதன்மைப் பாத்திரமல்ல, விருந்தினர் பாத்திரம்), பிரசாத் லட்சுமி ஆகியோர் உடன் நடித்தனர். மேலும் பி. வாசு இயக்கி, விஜயகாந்த் நடித்த பொன்மன செல்வன் (1989) படத்திலும். அதே ஆண்டு விஜயகாந்த்துடன் நடித்த ராஜநடை, வரவு நல்ல உறவு (1990) ஆகிய படங்கள் வெளியாயின. வரவு நல்ல உறவு படத்திற்கு விசு சிறந்த கதை எழுத்தாளருக்கான தமிழ்நாடு அரசு விருதைப் பெற்றார். டி. என் கண்ணா இயக்கிய பெண் சார்ந்த கதையான நெஞ்ச தொட்டு சொல்லு என்ற தமிழ்த் திரைப்படத்திலும் இவர் நடித்தார்.
1987 இல் இவர் சாஜன் இயக்கிய நிறபேதங்கள் என்ற மலையாள திரைப்படங்களில் நடித்தார். அப்படத்தில் இவருடன் பிரதாப் போத்தன், அம்பிகா, கீதா, கனிகேனம் நேரம் ஆகியோர் நடித்தனர். ராஜசேனன் இயக்க ரத்திஷ் மற்றும் சரிதா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்தனர். பின்னர் மேலும் பல மலையாள படங்களில் நடித்தார்.
ராகவேந்திரா ராஜ்குமார் நடிக்க எம். எஸ். ராஜசேகர் இயக்கிய அனுகுலகோபா கண்டா திரைப்படங்கள் மூலம் 1990 இல் கன்னட திரையுலகில் நுழைந்தார். கன்னடத்தில் மேலும் சில படங்கள் நடித்தார்.
இவர் இந்திய முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், ஜெகதீஷ், முகேஷ், ஜெயராம், சுரேஷ் கோபி, அம்பரீஷ், அனந்த் நாக், சிவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் போன்ற பலருடன் இவர் ஜோடியாக நடித்துள்ளார்.
நடனக் கலைஞராக
கோடை மழை வித்யா, வித்யாஸ்ரீ என்றும் அழைக்கப்படும் சுனிதா, நன்கு அறியப்பட்ட இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டியம் பயின்றவர். இவர் 3 வயதில் நடனமாடத் தொடங்கி, 11 வயதில் அரங்கேற்றம் செய்தார். "குருகுலம்" என்ற பழைய பாரம்பரியத்தின்படி பயிலும் பாக்கியத்தை இவர் பெற்றிருக்கிறார். பத்மஸ்ரீ வாழுவூர் ராமையா பிள்ளை மற்றும் அவரது மகன் கலைமாமணி வழுவூர் ஆர். சமராஜ் ஆகியோரிடமிருந்து பரதநாட்டியத்தின் வழுவூர் பாணியில் பயிற்சி பெற்றார். இன்றுவரை, இவர் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். அமிதாப் பச்சன், மம்மூட்டி, மோகன்லால், வினீத் போன்றோருடன் உலகம் முழுவதும் பல மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிருத்யாஞ்சலி ஸ்கூல் ஆப் டான்ஸில் கலை இயக்குநராக இருந்து நடனப் பள்ளியை சுனிதா நடத்தி வருகிறார்.[1] கடந்த பத்து ஆண்டுகளில் பாரம்பரிய நடனம் கற்பிப்பதற்கும், நிகழ்த்துவதற்கும் தன்னை அர்ப்பணிப்பதன் மூலம் தென் கரொலைனாவின் கலாச்சார வாழ்க்கையை வளப்படுத்தியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் ஆந்திராவில் வேணுகோபால் சிவராமகிருஷ்ணன் மற்றும் புவனா ஆகியோருக்குப் பிறந்தார். 1996 ஆம் ஆண்டில் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 1998 இல் ஷஷாங்க் என்ற மகன் பிறந்தார். இவர் தற்போது அமெரிக்காவின் தென் கரொலைனாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.[2]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1986 | கோடை மழை | வித்யா | தமிழ் | திரைப்பட நாயகியாக அறிமுகம் |
1987 | மாவீரன் | ஹெலினா | தமிழ் | |
1987 | கனிகணம் நேரம் | இந்து | மலையாளம் | |
1987 | நேரம் நல்லா இருக்கு | ருக்கு | தமிழ் | |
1987 | நிறபேதங்கள் | இந்து | மலையாளம் | |
1988 | உழைத்து வாழ வேண்டும் | ராணி | தமிழ் | |
1989 | மிருகயா | பாக்யலட்சுமி | மலையாளம் | வேட்டைக்காரன் சிலுவை தமிழில் தெலுங்கில் மிருகம் |
1989 | பொன்மன செல்வன் | ராதா | தமிழ் | தெலுங்கில் சரணராஜு |
1989 | திராவிடன் | சாரதா | தமிழ் | |
1989 | ராஜநடை | தேன்மொழி | தமிழ் | |
1990 | அப்பு | சரோஜினி | மலையாளம் | |
1990 | அனுகூலக்கோபா கண்டா | ராதா | கன்னடம் | |
1990 | கஜகேசரியோகம் | கார்த்திகா | மலையாளம் | |
1990 | வரவு நல்ல உறவு | வளர்மதி | தமிழ் | |
1991 | நீலகிரி | லட்சுமி | மலையாளம் | தெலுங்கில் ரௌடி ராஜ்சியம் |
1991 | ரோல் கால் ராமகிருஷ்ணா | சுவப்னா | கன்னடம் | |
1991 | மிமிக்ஸ் பாரடே | சந்தியா செரியன் | மலையாளம் | |
1991 | கொல்லூர் ராதா | ராணி | கன்னடம் | |
1991 | ஜார்ஜூட்டி சி / ஓ ஜார்ஜூட்டி | அலிசி | மலையாளம் | |
1991 | இரிக்கு எம்.டி அகதுண்டு | அன்சி ஸ்ரீதரன் | மலையாளம் | |
1991 | அரலித ஹூவுகலு | சுதா | கன்னடம் | |
1991 | பூக்காலம் வரவாய் | துளசி | மலையாளம் | |
1991 | உத்தராகண்டம் | மலையாளம் | ||
1991 | குஞ்சிகிளியே கூட்டேவிட் | மலையாளம் | ||
1991 | முக சித்ரம் | சுந்தா | மலையாளம் | |
1991 | புக்சட்டே கண்டா ஹொட்டே தும்பா உண்டா | ரேவதி | கன்னடம் | |
1992 | சினேகசாகரம் | காவேரி | மலையாளம் | |
1992 | முகமுத்ரா | தேவி | மலையாளம் | |
1992 | மந்திரிகாசெப்பு | சியாமா | மலையாளம் | |
1992 | ஆர்த்ரம் | சயினபா | மலையாளம் | |
1992 | சவிதம் | நீலிமா | மலையாளம் | |
1992 | பொன்னுருகும் பக்ஷி | அம்மினிகுட்டி | மலையாளம் | |
1992 | நெஞ்சத் தொட்டு சொல்லு | பொங்கனா | தமிழ் | |
1992 | காசர்கோடு காதர் பாய் | சந்தியா செரியன் | மலையாளம் | |
1992 | பூச்சக்கரு மணி கெட்டும் | ராதிகா | மலையாளம் | |
1993 | கற்பகம் வந்தாச்சு | ராதா | தமிழ் | தெலுங்கில் பேஜவாடா ரௌடி |
1993 | சௌபாகியம் | இந்து | மலையாளம் | |
1993 | வக்கீல் வாசுதேவ் | சிறீதேவி | மலையாளம் | |
1993 | ஆக்னியம் | ரமணி | மலையாளம் | |
1993 | வாத்சல்யம் | சுதா | மலையாளம் | |
1993 | ஆதிஹாம் என்ன இதீகம் | மெர்சி | மலையாளம் | |
1993 | சமூகம் | ராதிகா | மலையாளம் | |
1994 | நந்தினி ஒப்போல் | மாயா | மலையாளம் | |
1994 | பிரதக்ஷினம் | சுதா | மலையாளம் | |
1995 | சிரஞ்சீவி ராஜகவுடா | வசந்தா | கன்னடம் | |
1996 | கலிவீடு | ஊர்மிளா | மலையாளம் | |
2011 | அகேன் காசர்கோடு காதர் பாய் | சந்தியா செரியன் | மலையாளம் | காப்பக காட்சிகள் |
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- Sunitha at IMDb
- ↑ "Sunitha Raj's Nrithyanjali". http://www.nrithyanjalisc.com/indian-dance-school-guru.html.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150220114848/http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=14412595&programId=1073752204&channelId=-1073750705&BV_ID=@@@&tabId=3.