சுனந்தா (பாடகி)
சுனந்தா (Sunanda) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். 1983 இல் சென்னைக்குச் செல்வதற்கு முன் கேரளாவில் தனது முதல் பட்டப்படிப்பை முடித்தார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார். பின்னர் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிமுகமானார். சுனந்தா புதுமைப்பெண் திரைப்படத்தில் தனது முதற்பாடலைப் பாடினார். [1]
சுனந்தா | |
---|---|
பிறப்பு | கேரளா, இந்தியா |
பணி | இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 1984–1995 |
தொழில்
சுனந்தா தமிழில் பின்னணி பாடுவதற்கு முன், ஒரு மலையாள ஆவணப்படத்திற்காக கர்நாடக பாடல்களையும் சுலோகங்களையும் பாடினார். இவரது முதல் திரைப்படப் பாடல் வெற்றி பெற்றது. மேலும் இவர் 1980, 1990 களில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களைப் பாடினார்.[2] தனிப்பட்ட காரணங்களால் பல ஆண்டுகளாக இவரால் தொடர்ந்து பின்னணி பாட முடியவில்லை.
பாடிய பாடல்களில் சில
ஆண்டு | திரைப்படம் | இசையமைப்பாளர் | பாடல் |
---|---|---|---|
1984 | புதுமைப் பெண் | இளையராஜா | "காதல் மயக்கம்" |
1985 | சின்ன வீடு | இளையராஜா | "வெள்ள மனம் உள்ள மச்சான்" |
1987 | எங்க ஊரு பாட்டுக்காரன் | இளையராஜா | "செண்பகமே செண்பகமே" |
1988 | சொல்ல துடிக்குது மனசு | இளையராஜா | "பூவே செம்பூவே" |
1989 | என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் | இளையராஜா | "பூமுடித்து பொட்டு" |
1993 | வால்டர் வெற்றிவேல் | இளையராஜா | "மன்னவா மன்னவா" |
1993 | கிழக்குச் சீமையிலே | ஏ. ஆர். ரகுமான் | "எதுக்குப் பொண்டாட்டி" |
1994 | செவ்வந்தி | இளையராஜா | "செம்மீனே செம்மீனே" |
1994 | வீட்ல விசேஷங்க | இளையராஜா | "பூங்குயில் ரெண்டு ஒன்னுல" |
1995 | காதலன் | ஏ. ஆர். ரகுமான் | "இந்திரையோ இவள் சுந்தரியோ" |
1996 | மகாபிரபு | தேவா | "சொல்லவா சொல்லவா ஒரு" |
1997 | சூர்யவம்சம் | எஸ். ஏ. ராஜ்குமார் | "நட்சத்திர ஜன்னலில்" |
மேற்கோள்கள்
- ↑ "Interview With Playback Singer Sunandha | 'Paadava En Paadalai |-[ Epi-22]-(30/11/19) - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.
- ↑ "Sunanda Tamil Songs: Listen Sunanda Hit Tamil Songs on Gaana.com". Gaana.com. பார்க்கப்பட்ட நாள் 29 December 2020.