சுத்தானந்த பாரதியார்
சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 – மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார்.
வாழ்க்கைக் குறிப்பு
சுத்தானந்த பாரதியார் எனப் பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11-இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் 'பாரத சக்தி' எனும் மகா காவியத்தைப் பாடத் தொடங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாகத் தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார்.
திருக்குறள் மொழிபெயர்ப்பு
திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.
விருதுகள்
- 1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரக்கணக்கான நூல்களில், "பாரத சக்தி மகாகாவியம்" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.
- சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.
எழுதிய நூல்கள்
வ.எண் | வெளியான ஆண்டு | நூலின் பெயர் | பதிப்பகம் | பக்கம் | குறிப்பு |
---|---|---|---|---|---|
01 | 1938 | ஸ்ரீ அரவிந்த யோக தீபிகை | அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், சிங்கப்பூர் | 66 | மொழிபெயர்ப்பு |
02 | 1940 | பேரின்பம் | அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், புதுக்கோட்டை சமஸ்தானம் | 64 | கவிதைகள் |
03 | 1942 | ஞானி எமர்ஸன் | அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா | 36 | வாழ்க்கை வரலாறு |
04 | 1948 மே | நாவலர் பெருமான் | தமிழ்நாடு: புதுயுக நிலையம், புதுச்சேரி | 234 | |
05 | உடலுறுதி | யோக சமாஜம், வடலூர் | 140 | ஐந்தாம் பதிப்பு | |
06 | 1962 அக்டோபர் | விஞ்ஞான மணிகள் | சிவகங்கை வெளியீடு, சிவகங்கை | 106 | வாழ்க்கை வரலாறு |
07 | பாரத சக்தி மகா காவியம் | ||||
08 | யோக சித்தி | ||||
09 | அருட்செல்வம் | ||||
10 | கவிக் கனவுகள் | ||||
11 | கீர்த்தனாஞ்சலி | ||||
12 | நவரஸ நடனாஞ்சலி | ||||
13 | பாரத கீதம் | ||||
14 | தமிழ்க் கனல் | ||||
15 | ஆத்ம சோதனை | ||||
16 | ஏழைபடும் பாடு | ||||
17 | இளிச்சவாயன் | ||||
18 | அன்னை | ||||
19 | இவளும் அவளும் | ||||
20 | நாகரிகப் பண்ணை | ||||
21 | பகவத் கீதை | ||||
22 | இல்லற ஒழுக்கம் | ||||
23 | பெரியவாள் கதை | ||||
24 | அருட்பெருமான் | ||||
25 | சிவானந்த ஜோதி | ||||
26 | இதுதான் உலகம் | ||||
27 | தயானந்த ஜோதி | ||||
28 | பாப்பா பாட்டு | ||||
29 | கலிமாவின் காதல் | ||||
30 | Sri Aurobindo | ||||
31 | Integral Yoga | ||||
32 | The Gospel of Perfect Life | ||||
33 | Yogi Shuddhananda | ||||
34 | 2005 | பொது நெறி | |||
35 | கல்விக்கதிர் | ||||
36 | 1967 | தியான சாதனம் | சுத்தானந்த யோக சமாஜம், யாழ்ப்பாணம் | 48 | |
37 | 1948 | நாவலர் பெருமான் | புதுயுக நிலையம், புதுச்சேரி | 236 | |
38 | பாட்டாளி பாட்டு | ஆத்மஜோதி நிலையம் | 100 | கவிதைகள் | |
39 | 1975 | சோதனையும் சாதனையும் | சுத்தானந்த நூலகம், திருவான்மியூர், சென்னை | 434 | தன்வரலாறு, சுய வாழ்க்கை வரலாறு |
40 | 1937 | திருக்குறளின்பம் | அன்புமலர் | 260 | |
41 | 1946 | தேசியகீதம் | பாரத சக்தி நிலையம், புதுவை | 140 | 115 பாடல்கள் |
42 | 1962 | ஆத்மநாதம் | ஆத்மஜோதி நிலையம், நாவிலப்பட்டி, இலங்கை | 231 | பாடல்கள் |
இயற்றிய தமிழிசைப் பாடல்களின் பட்டியல்
- 'எப்படிப் பாடினரோ …' - கர்நாடக தேவ காந்தாரி.[1]
- 'தூக்கிய திருவடி துணை -(சங்கராபரணம்).