சுகுணா புருசோத்தமன்

சுகுணா புருசோத்தமன் (1941 - 25 பிப்ரவரி 2015) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்[1].

சுகுணா புருசோத்தமன்
சுகுணா புருசோத்தமன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சுகுணா புருசோத்தமன்
பிறந்ததிகதி 1941
இறப்பு 25 பிப்ரவரி 2015
அறியப்படுவது கருநாடக இசைப் பாடகர்

பிறப்பும், இசைப்பயிற்சியும்

சுகுணா புருசோத்தமன் சென்னையில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், திண்ணையம் வெங்கடராம ஐயர், பி. சாம்பமூர்த்தி ஆகியோரிடம் கருநாடக இசையினைக் கற்றார். லலிதாபாய் சாமண்ணாவிடம் வீணை கற்றுக்கொண்டார்.

இசைப் பணி

  • அனைத்திந்திய வானொலி, தூர்தர்சனில் உயர்தரக் கலைஞராக பணியாற்றியவர்.
  • இந்தியாவிலும் உலக நாடுகள் பலவற்றிலும் மேடைக் கச்சேரிகள் செய்தவர்.
  • இவர் எழுதிய பாடல்களைக் கொண்ட நூல், கதம்பம் எனப் பெயரிடப்பட்டு வெளியானது.

குறிப்பிடத்தக்க மாணவர்கள்

விருதுகள்

மறைவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 25 பிப்ரவரி 2015 அன்று சென்னையில் தனது 74ஆவது வயதில் காலமானார்[3].

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுகுணா_புருசோத்தமன்&oldid=8494" இருந்து மீள்விக்கப்பட்டது