சீ ஷீ திருவிழா
சீ ஷீ திருவிழா (The Qixi Festival (சீனம்: 七夕节), குய்ஹியாவோ விழா (Qiqiao Festival ( 乞巧节) என்றும் அழைக்கப்படுவது ஒரு சீனத் திருவிழா ஆகும். சீன புராணங்களின்படி ஸின்யூ என்ற பெண் தன் காதலனான நியுலங் என்பவரைக் காண இந்த நாளில் வருவதாக நம்பப்படுகிறது.[1] இந்த நாள் சீன நாட்காட்டியில் 7 வது மாதத்தின் 7 வது நாளில் வருகிறது.[2][3] இது சிலசமயங்களில் ஏழாவது இரட்டை விழா (the Double Seventh Festival) என்றும்,[4] சீன காதலர் தினம் (the Chinese Valentine's Day),[5] ஏழுகளின் இரவு (the Night of Sevens),[6] மக்பீ விழா (the Magpie Festival) என்றும் அழைக்கப்படுகிறது.
சீ ஷீ திருவிழா Qixi Festival | |
---|---|
பிற பெயர்(கள்) | குய்ஹியாவோ விழா |
கடைபிடிப்போர் | சீனர் |
நாள் | 7வது மாதத்தில் 7வது நாள் சீன நாட்காட்டியின்படி |
தொடர்புடையன | தனாபதா விழா (சப்பானில்) சில்சோக் திருவிழா (கொரியாவில்) |
Qixi | |||||||||||||||||||||||
சீன மொழி | 七夕 | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Literal meaning | "Evening of Sevens" | ||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
Qiqiao | |||||||||||||||||||||||
சீன மொழி | 乞巧 | ||||||||||||||||||||||
Literal meaning | "Beseeching Skills" | ||||||||||||||||||||||
|
இந்த விழாவானது காதலர்களான, ஸின்யூ மற்றும் நிவுலாங் ஆகியோரின் காதல் கதைப் புராணத்திலிருந்து வந்தது.[7] இந்த கதைக்குரிய விழாவானது ஆன் அரசமரபு காலத்திலிருந்து கொண்டாடப்படுகிறதாக தெரிகிறது.[8] இந்த புகழ்பெற்ற தொன்மம் குறித்த ஆரம்பகால அறியப்பட்ட குறிப்பானது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய செவ்வியல் இலக்கியமான சீ சிங் நூலில் உள்ள ஒரு கவிதையில் கூறப்பட்டுள்ளது.[9] சீ ஷீ திருவிழாவின் தாக்கமானது சப்பானின் தனாபதா விழா (Tanabata festival) மற்றும் கொரியாவின் சில்சோக் திருவிழா ( Chilseok festival) ஆகியவற்றில் உள்ளது.
தொன்மவியல்
நெசவு திறமைமிக்க ஸின்யூ என்ற பெண் தெய்வம், வானத்தில் இருந்து பூவுலக்கு வரும்போது நியுலங் என்ற மாடு மேய்க்கும் இளைஞனைக் கண்டு இருவரும் காதல் வயப்பட்டனர். காதலர்கள் இருவரும் காதல் மணம்புரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்தனர். இந்த விஷயம் தெரியந்த, சொர்க்கத்தின் ராணியான ஸின்யூவின் தாய், அவளை மீண்டும் சொர்க்கத்துக்கே அழைத்துசென்றுவிடுகிறார். இதனால் நியுலங்கும் அவனுடைய குழந்தைகளும் அவளின் நினைவுகளால் வருந்துகின்றனர்.
இதன்பிறகு நியுலங் பறக்கும் காலணிகளின் உதவியோடு மனைவியைத் தேடி சொர்க்கத்துக்கு செல்கிறான். ஆனால், ஸின்யூவின் தாய் அவர்கள் சந்திக்க முடியாதவாறு, ஒரு பால்வெளியை உருவாக்கிவிடுகிறார். இந்தக் காதலர்களின் அழுகுரலைக் கேட்ட ‘வால்காக்கை’ (magpie) பறவைகள், அவர்கள் பால்வெளியைக் கடக்கப் பாலத்தை அமைத்துகொடுக்கின்றன. ஒருகட்டத்தில், ஸின்யூவின் தாய் காதலர்கள் இருவரும் ஆண்டுக்கு ஒருமுறை ‘சீ ஷீ’ நாளில் சந்திக்க சம்மதிக்கிறார். அந்தத் நாளானது ஒவ்வொரு சீனப் புத்தாண்டுக்கு பிறகு ஏழாவது மாதத்தில் ஏழாவது நாளில் வரும். அப்படி அவர்கள் சந்தித்த நாளைத்தான் சீனர்கள் காதலர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.[10]
வழக்கங்கள்
வார்ப்புரு:Wide Image சீனக் காதலர் நாளை முன்னிட்டு, அன்றைய நாள் மக்கள் வண்ணமயமான கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். வயது வேறுபாடு இல்லாமல் பெண்களும், குழந்தைகளும், அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை ஆற்றில் விடுவார்கள். கியூஜோவ் என்ற இடத்தில் உள்ள பழமையான காதல் தேவன் கோயிலை நோக்கி, காதலர்கள் ஏராளமானோர் சீன பாரம்பரிய உடையுடன் செல்வர். அங்கு காதலர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் விளையாட்டுகளும் நடைபெறுவது வழக்கம்.
மேற்கோள்கள்
- ↑ Brown & Brown 2006, 72.
- ↑ Poon 2011, 100.
- ↑ Melton 2010, 913.
- ↑ Melton 2010, 912.
- ↑ Welch 2008, 228.
- ↑ Chester Beatty Library, online பரணிடப்பட்டது 2014-10-22 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Melton 2010, 912–913.
- ↑ Schomp 2009, 70.
- ↑ Schomp 2009, 89.
- ↑ கனி (1 செப்டம்பர் 2017). "ஆண்டுக்கு ஒருமுறை சந்திக்கும் காதலர்கள்!". கட்டுரை (தி இந்து). http://tamil.thehindu.com/society/lifestyle/article19594627.ece. பார்த்த நாள்: 1 செப்டம்பர் 2017.
நூற்பட்டியல்
வன்படி
- Allen, Tony; Phillips, Charles (2012). Ancient China's myths and beliefs. New York: Rosen Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4488-5991-7.
- Brown, Ju; Brown, John (2006). China, Japan, Korea: Culture and customs. North Charleston: BookSurge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4196-4893-4. https://archive.org/details/chinajapankoreac0000brow.
- Kiang, Heng Chye (1999). Cities of aristocrats and bureaucrats: The development of medieval Chinese cityscapes. Singapore: Singapore University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9971-69-223-6.
- Lai, Sufen Sophia (1999). "Father in Heaven, Mother in Hell: Gender politics in the creation and transformation of Mulian's mother". Presence and presentation: Women in the Chinese literati tradition. New York: St. Martin's Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-21054-X. https://archive.org/details/isbn_9780312210540.
- Melton, J. Gordon (2010). "The Double Seventh Festival". Religions of the world: A comprehensive encyclopedia of beliefs and practices (2nd ). Santa Barbara: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59884-203-6.
- Poon, Shuk-wah (2011). Negotiating religion in modern China: State and common people in Guangzhou, 1900–1937. Hong Kong: Chinese University of Hong Kong. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-962-996-421-4.
- Schomp, Virginia (2009). The ancient Chinese. New York: Marshall Cavendish Benchmark. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7614-4216-2. https://archive.org/details/ancientchinese0000scho.
- Mao, Xian (2013). Cowherd and Weaver and other most popular love legends in China. eBook: Kindle Direct Publishing.
- Stepanchuk, Carol; Wong, Charles (1991). Mooncakes and hungry ghosts: Festivals of China. San Francisco: China Books & Periodicals. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8351-2481-9. https://archive.org/details/mooncakeshungryg00caro.
- Welch, Patricia Bjaaland (2008). Chinese art: A guide to motifs and visual imagery. North Clarendon: Tuttle Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8048-3864-1. https://archive.org/details/chineseartguidet0000welc_m1z9.
இயங்கலை
- Ladies on the ‘Night of Sevens’ Pleading for Skills பரணிடப்பட்டது 2014-10-22 at the வந்தவழி இயந்திரம். Dublin: Chester Beatty Library.