சீர்காழி கோவிந்தராஜன்
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (Sirkazhi Govindarajan, 19 சனவரி 1933 – 24 மார்ச்சு 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். இவரின் பக்திப் பாடல்கள் தமிழுலகு நன்கு அறிந்த ஒன்றாகும்.
டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் | |
---|---|
பிறப்பு | சி. கோவிந்தராசன் சனவரி 19, 1933 சீர்காழி |
இறப்பு | மார்ச்சு 24, 1988 | (அகவை 55)
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி, சென்னை இசைக்கல்லூரி |
பணி | வாய்ப்பாட்டு |
செயற்பாட்டுக் காலம் | 1952-1988 |
அறியப்படுவது | இசை |
பெற்றோர் | சிவசிதம்பரம் அவையாம்பாள் |
வாழ்க்கைக் குறிப்பு
இவர் ஆரம்பக் கல்வியை வாணிவிலாஸ் பாடசாலை சீர்காழியில் பெற்றார்.
இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:
- தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
- வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
- செந்தாமரை முகமே - பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்
- கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்
பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம்
திரைப்படப் பாடகர்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
திரைப்படத்துக்காக பாடிய பாடல்கள்
(பட்டியல் முழுமையானதன்று)
எண் | பாடல் | பாடலாசிரியர் | இசையமைப்பாளர் | பாடல் இடம்பெற்ற திரைப்படம் |
---|---|---|---|---|
1 | பட்டணந்தான் போகலாமடி ... | எம்.வேணு | எங்க வீட்டு மகாலெட்சுமி | |
2 | அமுதும் தேனும் எதற்கு ... | கே. வி. மகாதேவன் | தை பிறந்தால் வழி பிறக்கும் | |
3 | மாட்டுக்கார வேலா ... | கே. வி. மகாதேவன் | வண்ணக்கிளி | |
4 | வில் எங்கே கணை இங்கே ... | எம். எஸ். விஸ்வநாதன், இராமமூர்த்தி | மாலையிட்ட மங்கை | |
5 | வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே ... | ஜி.இராமநாதன் | கோமதியின் காதலன் | |
6 | கொங்கு நாட்டுச் செங்கரும்பே ... | மாயவநாதன் | ஜி. இராமநாதன் | கோமதியின் காதலன் |
7 | மலையே என் நிலையே ... | ஜி. இராமநாதன் | வணங்காமுடி | |
8 | ஜக்கம்மா ... | ஜி.இராமநாதன் | வீரபாண்டிய கட்டபொம்மன் | |
9 | பட்டணந்தான் போகலாமடி ... | எம்.வேணு | எங்க வீட்டு மகாலெட்சுமி | |
10 | ஒற்றுமையாய் வாழ்வதாலே ... | கே. வி. மகாதேவன் | பாகப்பிரிவினை | |
11 | எங்கிருந்தோ வந்தான் ... | பாரதியார் | கே. வி. மகாதேவன் | படிக்காத மேதை |
12 | ஓடம் நதியினிலே ... | காத்திருந்த கண்கள் | ||
13 | கோட்டையிலே ஒரு ஆலமரம் ... | முரடன் முத்து | ||
14 | நல்ல மனைவி நல்ல பிள்ளை ... | நம்ம வீட்டு லட்சுமி | ||
15 | பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா ... | அக்கா தங்கை | ||
16 | கண்ணான கண்மணிக்கு அவசரமா ... | ஆலயமணி | ||
17 | கண்ணன் வந்தான் ... | ராமு | ||
18 | தேவன் கோவில் மணியோசை | கண்ணதாசன் | விஸ்வநாதன்-ராமமூர்த்தி | மணி ஓசை |
பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில
- பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
- மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
- காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
- ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு)
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.
- நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
- எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)
- உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
- வண்டு ஆடாத சோலையில் , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
- சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
- ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்) - ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
- யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
- ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்
- கண்ணன் வந்தான் (படம்: ராமு)(உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
- தேவன் வந்தான் (படம்: குழந்தைக்காக) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்)
- வெள்ளிப் பனிமலையின் (படம்: கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர்: திருச்சி லோகநாதன்)
- இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
- ஆயிரம் கரங்கள் நீட்டி (படம்: கர்ணன்) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1980[1]
- இசைப்பேரறிஞர் விருது, 1984. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
மேற்கோள்கள்
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2012-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120212161602/http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018.