சீன சிங்க நடனம்

ChinNewYr-dragon2.jpg

சீன சிங்க நடனம் பாரம்பரிய சீன நடனங்களில் ஒன்று. சிங்கத்தின் அசைவுகளை சிங்கம் போன்று உடையணிந்து பாசாங்கு செய்வதே சிங்க நடனம் ஆகும். பொதுவாக இரண்டு பேர் சிங்க நடனத்தை ஆடுவர். ஒருவர் தலையை பிடித்துக்கொண்டு முதல் இரு கால்களுமாக, மற்றவர் உடல் போன்ற போர்வைக்குள் பின் இரு கால்களுமாக சேர்ந்து ஒரு மிருகமாக, சிங்கமாக ஆடுவர். சிங்கத்தின் தலை கண்களையும் வாய்களை திறந்து மூடும்படி செய்யப்பட்டிருக்கும். இசைக்கேற்ப தாளத்துடன் சிங்கம் அங்கும் இங்கும் அசைந்து ஆடும். கால்களின் ஒத்திசைவு, இரு ஆட்டக்காரர்களின் ஒத்தசைவு இங்கு முக்கியம்.

"https://tamilar.wiki/index.php?title=சீன_சிங்க_நடனம்&oldid=29386" இருந்து மீள்விக்கப்பட்டது