சீன இசைநாடகம்
மரபு சீன இசை நாடகம் (Traditional Chinese opera) (மரபுவழிச் சீனம்: 戲曲; மாண்டரின் பின்யின்: xìqǔ; ||Jyutping]]: hei3 kuk1), அல்லது சீகூ என்பது சீன மக்களிடையே பரவலாக வழங்கும் இசைநாடக அரங்காகும், இதன் தோற்றம் பண்டைய சீன நாட்டிலேயே தொடங்கிவிட்டது. இது பண்டைய சீனாவில் நிலவிய பல கலை வடிவங்களின் கூட்டு நிகழ்த்துகலை ஆகும். இது ஆயிரம் ஆண்டுகளாக மெல்லப் படிமலர்ந்த கலை வடிவம் ஆகும். இது கி. பி 13 ஆம் நூற்றாண்டில் சாங் பேரரசு காலத்தில் தன் இன்றைய முதிர்நிலை வடிவத்தை அடைந்தது. சீன அரங்கின் பண்டைய வடிவங்கள் மிக எளியவை. ஆனால் அவை நாளடைவில் இசை, நடனம், பாடல். மற்கலை, இலக்கியக் கலை என பல்வேறு கலை வடிவங்களை இணைத்துக் கொண்டு மரபு சீன இசை நாடகம் ஆனது.[1]
சீன இசைநாடகம் | |||||||||||||||||||
பண்டைய சீனம் | 戲曲 | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நவீன சீனம் | 戏曲 | ||||||||||||||||||
|
இவற்றில் பல வட்டார வகைகள் உண்டு அவற்ருள் பீகிங் வகை இசைநாடகம், சாவோசிங் இசைநாடகம், காண்டோனிய இசைநாடகம், குங்கூ இசைநாடகம், இலிவியூ இசைநாடகம் என்பன இவற்றில் அடங்கும்.
வரலாறு
தாங் வரையமைந்த ஆறு அரச மரபுகள்
சீன நாடகத்தின் தொடக்கநிலை வடிவம் காஞ்சூன் இசைநாடகம் (參軍戲, அல்லது ஊழல்வாதி நாடகம்) ஆகும். இது பிந்தைய சாவோ பேரரசு காலத்தில் தோன்றியது(319–351).[2][3][4] இதன் தொடக்க வடிவத்தில் இது இரண்டு நிகழ்த்துனர்களைக் கொண்ட எள்ளல் நகைச்சுவை நாடகமாக இருந்தது. இருவரில் ஒருவர் ஊழல்வாதி (செய்யும் அலுவலர்) ஆவார். மற்றொருவர் அவரைக் கேலிசெய்யும் வெளுத்தமுடி காவுக் (蒼鶻) ஆவார்.[2] இந்த பாத்திரங்கள் பிந்தைய சீன இசைநாடக நிலையான பாத்திரங்களுக்கான முன்வடிவங்கள் ஆகும்; குறிப்பாக நகைச்சுவை சவு (丑) பாத்திரங்கள் ஆவர்.[5]
ஆறு பேரரசுகள் காலத்தில் பலவகை இசையும் நடனமும் கலந்த நாடகங்கள் உருவாகின. வடக்கத்திய குவி பேரரசில், பெருமுகம் (大面, இதன் பொருள் முகமூடிஎனவும் தைமியான் 代面 எனவும் இலான்லிங் அரசர் 蘭陵王 எனவும் பொருள்படும்), எனப்படும் முகமூடி நாடகம் முகமூடி அணிந்து போர்க்களம் புகுந்த காவோ சாங்குங் நினைவாக உருவாக்கப்பட்டது.[6][7] Another was called Botou (撥頭, also 缽頭), a masked dance drama from the Western Regions that tells the story of a grieving son who sought a tiger that killed his father.[8] ஆடிப் பாடும் பெண் (踏謡娘) நாடகம் குடித்துவிட்டு வந்த கணவனால் அடிக்கப்படும் பெண்ணின் கதையாகும். இந்த ஆடிப் பாடும் பெண் பாத்திர்ம் தொடக்கத்தில் பெண்போல உடுத்த ஓர் ஆணால் நிகழ்த்தப்பட்டது.[7][9] ஆடிப் பாடும் பெண் நாடகங்களின் கதை மிக எளியது. ஆனால், இவையே சீன இசை அரங்க குறுவடிவங்கள் ஆகும். என்றாலும், இவையே நுட்பமாகப் பின்னர் வளர்ந்த சீன இசைநாடகங்களுக்கான முன்னோடிகளாகும்.[7][10]
இவ்வகைத் தொடக்க இசைநாடகங்கள் தாங் பேர்ரசில் மக்களிடையே பரவலாக நிகழ்த்தப்பட்டன. பின்னர், இவை மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன. எடுத்துகாட்டாக, தாங் அரசமரபின் முடிவில் ஊழல்வாதி இசைநாடகம் சிக்கலான கதைக்கருக்களுடனும் எதிர்பாராத திருப்பங்களுடனும் படிமலர்ந்தது. இப்போது இதில் குறைந்தது நான்கு நிகழ்த்துனர்கள் நடித்தனர்.[11] இந்த்த் தொடக்கநிலிச் சீன இசைநாடகங்கள் தாங் பேரரசில் மிகச் சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டது. பேர்ரசய் சுவான்ழாங் (712–755), "பரல் தோட்டம்" (梨园/梨園; líyuán) எனும் முதல் இசைக் கல்விக் கழகத்தை நிறுவி, அதில் இசைஞருக்கும் நடனக் கலைஞருக்கும் நடிகர்களுக்கும் சிறந்த பயிற்சியை வழங்கினார்.[12] சீனாவில் இசைநாடக அணிகள் நிகழ்த்துனர்களால் உருவாக்கப்பட்டன. இவர்கள் பேரரசரின் சொந்த மகிழ்ச்சிக்காகவே நாடகங்களை நடத்தினர். இன்றும் இசைநாடக நிகழ்த்துனர்கள் "பரல் தோட்ட மாணாக்கர்" (梨园弟子 / 梨園弟子, líyuán dìzi) என வழங்கப்படுகின்றனர்.[13]
சாங் முதல் குவிங் வரை
1912–1949
1949–1985
அண்மைக் காலம்
உடைகளும் ஒப்பனையும்
வகைமைகள்
வடக்கத்தியவை
- பீகிங் இசைநாடகம் (京剧)
- யூ இசைநாடகம் (豫剧)
- எரென்ழுவான்/பாங்ழிசி/பென்பெங் இசைநாடகம் (二人转) (வடகிழக்கு சீனா)
- கெபேய் பாங்ழி (河北梆子) (கெபேய்)
- யியூ (吉剧) (யிலின்)
- உலூயு]] (吕剧) (சாந்துங்]])
- மாவோகியாங்(茂腔) (சாந்துங்)
- பிங்யூ (评剧) (கெபேய்)
- பூயு (蒲剧) (சான்சி)
- குவின்கியாங் (秦腔) (சான்சி)
- சாயு (雜劇)
- யின்யூ (:zh:晋剧|晋剧) (சான்சி)
தெற்கத்தியவை
|
|
காட்சிமேடை
குறிப்புகள்
- ↑ Wang Kefen (1985). The History of Chinese Dance. China Books & Periodicals. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0835111867.
- ↑ 2.0 2.1 Tan Ye (2008). Historical Dictionary of Chinese Theater. Scarecrow Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0810855144.
- ↑ "唐代參軍戲". 中國文化研究院.
- ↑ "Sichuan Opera". Archived from the original on பிப்ரவரி 24, 2007. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 3, 2018.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "The Tang Dynasty (618–907)". Asian Traditional Theatre and Dance. Archived from the original on 2014-08-23. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ Laurence Picken, ed. (1985). Music from the Tang Court: Volume 5. Cambridge University Press. pp. 1–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521347761.
- ↑ 7.0 7.1 7.2 Faye Chunfang Fei, ed. (2002). Chinese Theories of Theater and Performance from Confucius to the Present. University of Michigan Press. pp. 28–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0472089239.
- ↑ Tan Ye (2008). Historical Dictionary of Chinese Theater. Scarecrow Press. p. 336.
- ↑ "Theatre". China Culture Information Net. Archived from the original on திசம்பர் 25, 2013.
- ↑ "The Early History of Chinese Theatre". Asian Traditional Theatre and Dance. Archived from the original on 2017-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-04-04.
- ↑ Jin Fu (2012). Chinese Theatre (3rd ed.). Cambridge University Press. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521186667.
- ↑ Tan Ye (2008). Historical Dictionary of Chinese Theater. Scarecrow Press. p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0810855144.
- ↑ "Chinese Opera". onlinechinatours.com. பார்க்கப்பட்ட நாள் 2011-07-12.
மேற்கோள்கள்
- Rossabi, Morris (1988). Khubilai Khan: His Life and Times. Berkeley: University of California Press. ISBN 0-520-05913-1.
மேலும் படிக்க
- Shih, Chung-wen (1976). The Golden Age of Chinese Drama: Yüan Tsa-chu. Princeton, NJ: Princeton University Press. ISBN 0-691-06270-6.
- Riley, Jo (1997). Chinese Theatre and the Actor in Performance. Cambridge, UK: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். ISBN 0-521-57090-5.