சீனிவாசன் வரதராஜன்
சீனிவாசன் வரதராஜன் (பிறப்பு: மார்ச் 31, 1928) ஒரு இந்திய வேதியியல் அறிஞர் ஆவார். இவர் வேதியியலாளராக மட்டுமின்றி ஆட்சிப் பணியாளராக, கூட்டாண்மை அதிகாரியாக பல நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
சீனிவாசன் வரதராஜன் | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 31, 1928 தமிழ் நாடு, இந்தியா |
பணி | வேதியியலாளர் கூட்டாண்மை தலைவர் அரசுப் பணியாளர் |
விருதுகள் | பத்ம பூசன் |
தமிழ்நாட்டில் 1928 மார்ச் 31 அன்று பிறந்த இவர் சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திர பல்கலைக்கழகங்களில் இரண்டு முதுகலைப் பட்டங்களும், தில்லி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் இரண்டு முனைவர் பட்டங்களும் பெற்று தில்லிப் பல்கலைக்கழகம் (1949-53), மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (1956-57), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (1957-59) போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் இந்திய தேசிய அறிவியல் அகாடமி (1983), அறிவியல் இந்திய கல்வி நிறுவனம் (1972)[1]
அன்ட் சயின்ஸ் உலக அகாடமி (1997) ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காக 1985 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருது வழங்கி இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகனாக கௌரவிக்கப்பட்டார்.[2]
இவர் 1983ல் இந்திய தேசிய அறிவியல் அகாடமியிலும், 1972ல் இந்திய அறிவியல் கல்வி கூட்டமைப்பிலும், 1997ல் உலக அறிவியல் கூட்டமைப்பிலும் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.[3] இவர் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை கெளரவிப்பதற்கென இந்திய அரசு தனது மூன்றாவது மிகப்பெரிய விருதான பத்ம பூசன் விருதினை 1985 இல் இவருக்கு வழங்கி கெளரவித்துள்ளது.[2]
இவர் இந்திய பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (IPCL), பெட்ரோஃபில்ஸ் (Petrofils) கூட்டுறவு லிமிடெட், இந்தியப் பொறியாளர்கள் லிமிடெட் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்களின் தலைவராகவும் செயல்பட்டார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "IAS Fellow". Indian Academy of Sciences. 2016. http://www.ias.ac.in/describe/fellow/Varadarajan,_Dr_Srinivasan. பார்த்த நாள்: 2-05-2016.
- ↑ 2.0 2.1 "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2016 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.
- ↑ "TWAS Fellow". The World Academy of Sciences. 2016 இம் மூலத்தில் இருந்து 2016-04-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160404001909/http://twas.org/network/members/v. பார்த்த நாள்: 2 மே 2016.
- ↑ "Indian Fellow". Indian National Science Academy. 2016. http://www.insaindia.org.in/detail.php?id=N83-0861. பார்த்த நாள்: 2-05-2016.