சி. ருத்ரைய்யா
சி.ருத்ரைய்யா (C. Rudhraiya, ஜூலை 25, 1947 - நவம்பர் 18, 2014) 1978ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்தவர்.இவரின் சொந்த ஊர் சேலம் அருகிலுள்ள ஆத்தூர். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தவர்.சென்னை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை எழுத்து மற்றும் இயக்கம் படித்தார்.[1] இவரது முதல் படமான "அவள் அப்படித்தான்", முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தபோதும்[2][3], அவர்களிடமிருந்து வழமையாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களைக் கொண்டிராது, வேறுபட்ட, உளவியல் தொடர்பான கதையைமைப்பைக் கொண்டிருந்ததால் தோல்வியுற்றது. இருப்பினும், இன்றளவும், தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.
ருத்ரைய்யா Rudraiah | |
---|---|
பிறப்பு | ருத்ரைய்யா சொக்கலிங்கம் சூலை 25, 1947 |
இறப்பு | 18 நவம்பர் 2014 (வயது 67) |
மற்ற பெயர்கள் | ஆறுமுகம் (ஆறுகுட்டி) |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1978–1980 |
புதுமுகங்களை வைத்து 1980 ஆம் ஆண்டு சி.ருத்ரைய்யா இயக்கிய "கிராமத்து அத்தியாயம்" என்னும் திரைப்படமும் தோல்வியுற்றது. இதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவரவில்லை. சில முயற்சிகள் துவக்கத்திலேயே தோல்வியுற்று விட்டன.
2014 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாளன்று தனது 67வது அகவையில் சென்னையில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
- ↑ தி இந்து, கடலில் கலந்த புதுப்புனல் 20.நவம்பர் 2014
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141121192322/http://tamilscreen.com/rudraiah-director-news/.
- ↑ http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-14/aval-appadithaan-rudraiyya-passes-away.html
- ↑ http://www.thehindu.com/entertainment/tamil-film-director-rudraiyaa-passes-away/article6613655.ece
புற இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் C.Rudhraiya
- An Outsider who saw within - Ganga Rudraiah (The Hindu, 2016 Nov 19)