சி. தட்சிணாமூர்த்தி

சி. தட்சிணாமூர்த்தி (1943 - 2016) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த சிற்பி, மற்றும் ஓவியராவார்.[1] இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் பிறந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்தவர். இவர் 1966 இல் சென்னை ஓவியக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பிரிட்டனின் க்ராய்டன் வடிவமைப்பு மற்றும் அச்சுக் கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு முடித்து ஓவியம், சிற்பம் அச்சுக் கலை எனப் பல துறைகளிலும் செயல்பட்டார். இவர் கலைத் தொழில் கல்லூரியில் 1970 இல் ஆசிரியராக பணியில் சேர்ந்து, சென்னை ஓவியக் கல்லூரியில் சுடுமண் சிற்பத் துறைத் தலைவராக உயர்ந்து ஓய்வுபெற்றவர். இவர் வண்ணக்கலை, சுடுமண் சிற்பம், நவீன சிற்பக்கலை ஆகியவற்றில் வல்லுநராக விளங்கியவர். இவர் இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்றும், சிற்பத் துறை குறித்து உரையாற்றியுள்ளார். இவர் சுடுமண் சிற்பத்துக்காக 1986 இல் தேசிய விருதையும், மாநில விருதுகளை 1963 1965 ஆகிய ஆண்டுகளில் பெற்றவராவார்.[2]

மேற்கோள்கள்

  1. "காலமானார் சிற்பி தட்சிணாமூர்த்தி". செய்தி. தினமணி. 24 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2016.
  2. "இடையறாது இயங்கிவந்த கலைஞன்". கட்டுரை. தி இந்து. 25 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2016.
"https://tamilar.wiki/index.php?title=சி._தட்சிணாமூர்த்தி&oldid=21385" இருந்து மீள்விக்கப்பட்டது