சி. ஜெயசங்கர்

சிவஞானம் ஜெயசங்கர் (பி. டிசம்பர் 29, 1965) ஒரு சமூகச் செயற்பாட்டாளர்; முதுநிலை விரிவுரையாளர்; ஆய்வாளர்; எழுத்தாளர்; நாடக நடிகர். எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான கமலா வாசுகியின் துணைவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைக் குறிப்புக்கள்

கோண்டாவிலில் பிறந்த இவர் கோண்டாவில் இந்து மகா வித்தியாலம், கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ் புனித பரியோவான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பிரிவில் சிறப்புப் பட்டம் பெற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுதேசிய சமுதாய அரங்காக கூத்தின் மீளுருவாக்கம் என்ற தலைப்பில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றார். இப்பொழுது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.

இவரது பணிகள்

Third Eye என்ற இதழை வெளியிடும் இவர் மட்டக்களப்பில் இயங்கும் மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழுவின் இணை இணைப்பாளராகச் சேவையாற்றுகிறார். அவ்வமைப்பினரின் மூன்றாவது கண் இதழின் இணையாசிரியருமாவார். பலவிதமான சமூகச் செயற்பாடுகள், பட்டறைகள், கூத்துக்கள் போன்ற அரங்க அளிக்கைகள், நூல் வெளியீடுகள் எனப் பலவிதமான சமுதாயச் செயற்பாடுகளில் ஈடுபடுபவராவார்.

"https://tamilar.wiki/index.php?title=சி._ஜெயசங்கர்&oldid=2860" இருந்து மீள்விக்கப்பட்டது