சி. சரவணகார்த்திகேயன்


சி. சரவணகார்த்திகேயன் (சிஎஸ்கே, பிறப்பு: ஆகத்து 13, 1984) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இணையத்திலும் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றிருக்கிறார்.[1][2]

சி. சரவணகார்த்திகேயன்
சி. சரவணகார்த்திகேயன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சி. சரவணகார்த்திகேயன்
பிறந்ததிகதி ஆகத்து 13, 1984
அறியப்படுவது எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு

சரவணகார்த்திகேயன் கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் பிறந்தார். ஈரோட்டில் பள்ளிப் படிப்பை மேற்கொண்ட இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் (கிண்டி பொறியியல் கல்லூரி) கணிப்பொறி இயல் படிப்பை முடித்தார். தற்போது பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக‌ப் பணியாற்றுகிறார்.

நூல்கள்

  • மியாவ் - 2018 [சிறுகதை]
  • ஆப்பிளுக்கு முன் - 2017 [நாவல்]
  • இறுதி இரவு - 2016 [சிறுகதை]
  • 96: தனிப்பெருங்காதல் - 2018 [திரைப்படம்]
  • ஆகாயம் கனவு அப்துல் கலாம் - 2016 [அறிவியல்]
  • வெட்கம் விட்டுப் பேசலாம் - 2014 [வரலாறு]
  • குஜராத் 2002 கலவரம் - 2014 [வரலாறு]
  • சந்திரயான் - 2009 [அறிவியல்]

மின்னூல்கள்

  • சேர நன்னாட்டிளம் பெண்கள் - 2018 - அமேசான் கிண்டில்
  • பிரியத்தின் துன்பியல் - 2018
  • கமல் ஹாசனின் அரசியல் - 2017
  • ஐ லவ் யூ மிஷ்கின் - 2015 - DailyHunt
  • கிட்டதட்ட கடவுள் - 2013 - (அம்ருதா பதிப்பகம்)

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சி._சரவணகார்த்திகேயன்&oldid=4116" இருந்து மீள்விக்கப்பட்டது