சி. ஆர். விஜயகுமாரி
விஜயகுமாரி 1950களில் நடிக்கத் துவங்கிய தமிழ்த் திரைப்பட நடிகை.
சி. ஆர். விஜயகுமாரி | |
---|---|
பிறப்பு | 27 ஏப்ரல் 1936 மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1953-2003 |
வாழ்க்கைத் துணை | எஸ். எஸ். ராஜேந்திரன் (1961-1973) (இறப்பு 2014), நேசனல் முதலியார் [1] |
பிள்ளைகள் | இரவிக்குமார் (பி.1963)[2] |
பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர். ஸ்ரீதரின் முதல் திரைப்படம் " கல்யாண பரிசு ", கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் திரைப்படம் சாரதா, ஆரூர்தாஸ் இயக்கிய முதல் திரைப்படம் பெண் என்றால் பெண், மல்லியம் ராஜகோபாலின் "ஜீவனாம்சம்" ஆகியவை இத்தகையத் திரைப்படங்களாகும்.
அவர் நடித்த சில திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்தன. காட்டாக, சாரதா, சாந்தி, ஆனந்தி, பவானி ஆகும். ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த போலீஸ்காரன் மகள் , ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய நானும் ஒரு பெண் திரைப்படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது. பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்துள்ளார்.
திரைப்பட நடிகர் எஸ். எஸ். இராஜேந்திரனைத் திருமணம் புரிந்து கொண்டார்.[3] இருப்பினும் மணவாழ்வில் ஏற்பட்ட பிணக்கின் விளைவாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இவருக்கு இரவி என்றொரு மகன் உள்ளார்.[4]
நடித்த சில திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1953 | நால்வர் | தமிழ் | ||
1958 | பெற்ற மகனை விற்ற அன்னை | தமிழ் | ||
1958 | பதிபக்தி | தமிழ் | ||
1958 | வஞ்சிக்கோட்டை வாலிபன் | தமிழ் | ||
1959 | அழகர்மலை கள்வன் | தமிழ் | ||
1959 | கல்யாணப் பரிசு | தமிழ் | ||
1959 | நாட்டுக்கொரு நல்லவள் | தமிழ் | ||
1960 | தங்கரத்தினம் | தமிழ் | ||
1960 | தங்கம் மனசு தங்கம் | தமிழ் | ||
1961 | குமுதம் | தமிழ் | ||
1961 | பணம் பந்தியிலே | தமிழ் | ||
1962 | ஆலயமணி | தமிழ் | ||
1962 | தெய்வத்தின் தெய்வம் | தமிழ் | ||
1962 | எதையும் தாங்கும் இதயம் | தமிழ் | ||
1962 | முத்து மண்டபம் | தமிழ் | ||
1962 | பாத காணிக்கை | தமிழ் | ||
1962 | போலீஸ்காரன் மகள் | தமிழ் | ||
1962 | சாரதா | தமிழ் | ||
1962 | சுமைதாங்கி | தமிழ் | ||
1963 | குங்குமம் | தமிழ் | ||
1963 | ஆசை அலைகள் | தமிழ் | ||
1963 | கைதியின் காதலி | தமிழ் | ||
1963 | காஞ்சித் தலைவன் | தமிழ் | ||
1963 | மணி ஓசை | தமிழ் | ||
1963 | நானும் ஒரு பெண் | தமிழ் | ||
1963 | நீங்காத நினைவு | தமிழ் | ||
1963 | பார் மகளே பார் | தமிழ் | ||
1964 | அல்லி | தமிழ் | ||
1964 | பச்சை விளக்கு | தமிழ் | ||
1964 | பாசமும் நேசமும் | தமிழ் | ||
1964 | பூம்புகார் | தமிழ் | ||
1965 | ஆனந்தி | தமிழ் | ||
1965 | காக்கும் கரங்கள் | தமிழ் | ||
1965 | பணம் தரும் பரிசு | தமிழ் | ||
1965 | பூமாலை | தமிழ் | ||
1965 | சாந்தி | தமிழ் | ||
1966 | அவன் பித்தனா | தமிழ் | ||
1966 | கொடிமலர் | தமிழ் | ||
1966 | மணி மகுடம் | தமிழ் | ||
1967 | சுந்தர மூர்த்தி நாயனார் | தமிழ் | ||
1967 | விவசாயி | தமிழ் | ||
1967 | கணவன் | தமிழ் | ||
1967 | பவானி | தமிழ் | ||
1968 | கல்லும் கனியாகும் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1968 | நீயும் நானும் | தமிழ் | ||
1968 | தேர்த் திருவிழா | தமிழ் | ||
1968 | ஜீவனாம்சம் | தமிழ் | ||
1969 | அவரே என் தெய்வம் | தமிழ் | ||
1969 | மனைவி | தமிழ் | ||
1971 | சவாலே சமாளி | தமிழ் | ||
1973 | ராஜராஜ சோழன் | தமிழ் | ||
1973 | அன்பைத் தேடி | தமிழ் | ||
1976 | சித்ரா பௌர்ணமி | தமிழ் | ||
1983 | தங்க மகன் | தமிழ் | ||
1984 | நான் மகான் அல்ல | தமிழ் | ||
1986 | மாவீரன் | தமிழ் | ||
1990 | பெரிய இடத்து பிள்ளை | தமிழ் | ||
1993 | அரண்மனைக்கிளி | தமிழ் | ||
1993 | ஆத்மா | தமிழ் | ||
1996 | பூவே உனக்காக | தமிழ் | ||
1997 | தர்ம சக்கரம் | தமிழ் | ||
2000 | தெனாலி | தமிழ் | ||
2003 | காதல் சடுகுடு | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "S.S. Rajendran: Dialogue delivery was his forte". http://www.thehindu.com/features/cinema/veteran-tamil-actor-ss-rajendran-passes-away-in-chennai/article6530024.ece. பார்த்த நாள்: 5 January 2015.
- ↑ "Potpourri of titbits about cinema - Vijayakumari". http://www.kalyanamalaimagazine.com/Content/Thiraichuvai/June11_1_15/Potpourri_of_titbits_about_Tamil_cinema_Vijayakumari_page1.html. பார்த்த நாள்: 5 January 2015.
- ↑ [1]
- ↑ https://antrukandamugam.wordpress.com/2013/09/09/vijayakumari/