சிவாஜி தேவ்

சிவாஜி தேவ் (பிறப்பு 20 செப்டம்பர் 1989) என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல தமிழ் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் ஆவார்.[1] இவர் 2008 இல் வெங்கடேஷ் இயக்கத்தில் சிங்கக்குட்டி என்ற படத்தில் அறிமுகமானார்.[2] சிவாஜி தேவ் என்ற தனது பெயரை சிவக்குமார் என மாற்றம் செய்துகொண்டு படத்தில் நடித்து வருகிறார்.[3]

குடும்பம்

சிவாஜி தேவ் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ராம்குமார் கணேசன் என்பவரின் மகன் ஆவார். இவருடைய தாயார் மீனாட்சியின் சகோதரி பிரபல நடிகை ஸ்ரீபிரியா ஆவார். இவர் நடிகை சுஜா வருணே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[4][5][6] இத்தம்பதிகளுக்கு அத்வார்த் என்ற மகன் உள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
2008 சிங்கக்குட்டி கதிர்
2012 புதுமுகங்கள் தேவை ஆனந்த்
2014 இதுவும் கடந்து போகும் கௌதம்

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் தொலைக்காட்சி குறிப்பு
2022 பிக்பாஸ் ஜோடிகள் (சீசன் 2) பங்கேற்பாளர் ஸ்டார் விஜய் வெற்றியாளர்

வலைதள நாடகங்கள்

ஆண்டு தலைப்பு கதாபாத்திரம தொலைக்காட்சி குறிப்பு
2019 பிங்கர்டிப் (தொலைக்காட்சி தொடர்) (சீசன் 1) விஜய் ஜீ5 தமிழ்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிவாஜி_தேவ்&oldid=22240" இருந்து மீள்விக்கப்பட்டது