சிவாக்கிர பாஷ்யம்

சிவாக்கிர பாஷ்யம் 12 ஆயிரம் எழுத்துக்களைக் (கிரந்தம்) கொண்ட ஒரு பெருநூல். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் இதனை இயற்றினார்.

தமிழ்நூலுக்கு வடமொழி விளக்கம்
வடமொழியிலுள்ள சிவஞான போத நூற்பாக்கள் பன்னிரண்டின் விளக்கம் என்றும், வடமொழி 'ரௌரவாகமம்' ஆகமத்தில் உள்ளதாகச் சொல்லப்படும் 'பாச விமோசனப் படலம்' 12 நூற்பாக்களின் மொழிபெயர்ப்பு என்றும் இந்த நூலை ஒருகாலத்தில் நம்பினர். உண்மை வேறு. கிடைத்துள்ள வடமொழி ரௌரவாகமப் பகுதி வித்தியாபாத, கிரியாபாதப் பகுதிகளில் இந்த நூல் குறிப்பிடும் சூத்திரங்கள் இல்லை.
எனவே தமிழில் உள்ள 'சிவஞான போதத்தின்' வடமொழி ஆக்கமே இந்த நூல் எனத் தெளிவாகத் தெரிகிறது.
இந்த நூலுக்கு முன்னும் பின்னும்
இந்த நூலின் முன்னோரான சதாசிவ சிவாசாரியார் (1450 - 1500) வடமொழிச் சிவஞான போதத்துக்கு வடமொழியில் ஒரு விருத்தியுரை எழுதியுள்ளார்.
இந்த வடமொழி நூலானது, பிற்காலத்தில் சிவஞான சாமிகள் (18-ஆம் நூற்றாண்டு) தமிழிலுள்ள சிவஞான போதத்துக்குத் தமிழில் சிற்றுரையும், பேருரையும் எழுத உதவியாக அமைந்ததைக் காணமுடிகிறது.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=சிவாக்கிர_பாஷ்யம்&oldid=17252" இருந்து மீள்விக்கப்பட்டது