சிவமணி (பிறப்பு: 1 திசம்பர் 1959), அவரது மேடைப் பெயரான டிரம்சு சிவமணி என பொதுவாக அறியப்படுவார். ஒரு இந்திய நூதன முரசு அவர் டிரம்சு உட்பட பல கருவிகளை வசிப்பார் குறிப்பாக முரசு, உடுக்கை, கடம் மற்றும் கஞ்சிரா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் துடுப்பாட்டத்தின் போது டிரம்சு வாசித்தார். ஏ.ஆர்.ரகுமான் இசைகளில் இவர் முன்னணி டிரம்சு வாசிப்பளர், இவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். 2019 ஆம் ஆண்டில், அவருக்கு பத்மசிறீ விருது கிடைத்தது.[1] .

சிவமணி
Sivamani
Sivamani 2009.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சிவமணி
பிறப்பு1 திசம்பர் 1959 (1959-12-01) (அகவை 64)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)தாளம் தட்டு / இசை அமைப்பாளர்
இசைத்துறையில்1971 – present
இணையதளம்www.sivamani.in

தொழில்

சிவமணி சென்னையில் உள்ள டிரம்சு வாசிப்பவர், இவர் தனது ஏழு வயதில் டிரம்சு வாசிக்க தொடங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பலருடன் இணைந்து பணிசெய்துள்ளார். 1990 ஆம் ஆண்டில், மும்பையின் ரங் பவனில் பில்லி கோபனுடன் மேடையை பகிர்ந்து கொண்டார். [2] எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது குரு என்று அவர் தெரிவித்துள்ளார்.

விருதுகள்

2009 ஆம் ஆண்டு கலைத்துறையில் உயரிய விருதான தமிழக அரசால் சிவமணிக்கு 'கலைமணி' விருது வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு சிவமணிக்கு "பத்மசிறீ" விருது இந்திய அரசு வழங்கியது.

ஆல்பங்கள்

  • கோல்டன் கிருதிச் கலர்ச், (1994) திலீப் குமார் மற்றும் ஏ. ஆர். ரகுமான் இணைந்து [3]
  • தூய பட்டு (2000)
  • கிருஷ்ண கிருஷ்ணா, மலையாள இசையமைப்பாளர் ராகுல் ராசு உடன் இங்கிலாந்தில் வெளியான கிளப் டிராக்.
  • டிரம்சு ஆன் ஃபயர் (2003). புதிய பூமி (ஜேம்ஸ் ஆசருடன் இணைந்து) [4]
  • காஷ் ( ஹரிஹரனுடன் முதல் காசல் ஆல்பம்) [2]
  • மஹலீலா (சிவமணியின் முதல் தனிப்பட்ட ஆல்பம்)
  • அரிமா நம்பி (2014)
  • கனிதன் (2016)
  • ஹலோ (வெளியிடப்படவில்லை)

திரைப்படவியல்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சிவமணி&oldid=8052" இருந்து மீள்விக்கப்பட்டது