சிவஞான சித்தியார் உரை (ஈழத்து ஞானப்பிரகாசர்)

சிவஞான சித்தியார் உரை என்பது சிவஞான சித்தியார் நூலுக்கு 17 ஆம் நூற்றாண்டில் ஈழத்து ஞானப்பிரகாசர் என்று தமிழ்நாட்டில் அறியப்பட்ட புலவரால் எழுதப்பட்ட உரைநூல் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் ஈழத்தில் திருநெல்வேலியில் பிறந்தார். போர்த்துக்கேயரின் சமய அடக்குமுறையிலிருந்து தப்புவதற்காக இந்தியா சென்றார். இவர் வட இந்தியா சென்று வடமொழியும் பிற சாத்திரங்களும் கற்று, பின்னர் தமிழ்நாடு வந்து இந்த நூலை இயற்றினார்.

ஈழத்து உரைமரபிற்கு இந்த நூல் ஒரு முக்கிய மூலமாக காலநிதி எஸ். சிவலிங்கராஜா தமது ஈழத்து தமிழ் உரைமரபு என்ற ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார்.[1] இந்த நூலின் உரை பின்னாள் உரையாசிரியர்களினால் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட ஒன்றாகும்.[2]

மேற்கோள்கள்

  1. காலநிதி எஸ். சிவலிங்கராஜா (2004). ஈழத்து தமிழ் உரைமரபு. குமரன் புத்தக இல்லம். 
  2. கலாநிதி க. கணேசலிங்கம். "சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பணிகள்" இம் மூலத்தில் இருந்து 2013-06-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130611034023/http://www.kuppilanweb.com/essay/kanesalingamspeech.html. பார்த்த நாள்: 17 திசம்பர் 2016. 

வெளி இணைப்புகள்