சிறை (திரைப்படம்)
சிறை (Sirai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சிறை | |
---|---|
இயக்கம் | ஆர். சி. சக்தி |
தயாரிப்பு | வி. மோகன் ஆனந்தி பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ராஜேஷ் லட்சுமி |
வெளியீடு | நவம்பர் 22, 1984 |
நீளம் | 3927 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- லட்சுமி- பாகீரதி
- ராஜேஷ்- அந்தோனியாக
- பாண்டியன் - முத்துவாக
- இளவரசி - ஜில்லாவாக
- பிரசன்னா- ரகுபதியாக
- எஸ். எஸ். சந்திரன்
- வி. கோபாலகிருட்டிணன்- இருதயசாமி
- ஐசரி வேலன்- மருது
- அனுராதா - ("பாத்துக்கோ" பாடலில் சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார், பாடல் வரிகளை புலமைப்பித்தன், முத்துலிங்கம் மற்றும் பிறைசூடன் ஆகியோர் எழுதினர்.[1][2] இந்தப் படம் கவிஞர் பிறைசூடனின் திரைப்பட அறிமுகமாகும். அவர் "ராசாத்தி ரோசாப்பூ வெக்கம் ஏனோ இன்னும்" பாடலை எழுதினார், முத்துலிங்கம் "பாத்துக்கோ" எழுதினார், புலமைப்பித்தன் "நான் பாடிக்கொண்டே இருப்பேன்", மற்றும் "விதி எனும் கரங்கள்" பாடல்களை எழுதினார். "நான் பாடிக்கொண்டே இருப்பேன்" பாடல் கர்நாடக ராகத்தில் ஷ்யாமா என அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 464.
- ↑ "Sirai" இம் மூலத்தில் இருந்து 9 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180409064741/https://www.saavn.com/s/album/tamil/Sirai-1984/WrtOIKSzQOE_.