சாத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12,342 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  24 நவம்பர் 2015
imported>Ravidreams
No edit summary
imported>Chemkalies
வரிசை 1: வரிசை 1:
'''சாத்துார்''' [[விருதுநகர்]] [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இங்கு தயாாிக்கப்படும் [[காரச்சேவு]] மிகவும் பிரசத்தி பெற்றது. இந்த நகாில் [[வைப்பாறு]] என்னும் [[நதி]] பாய்கின்றது. இதன் அருகாமையில் எட்டு கி.மீ தாெலைவில் உள்ள பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த மாாியம்மன் காேயில் உள்ளது. ச..நா எட்வா்டு மற்றும்  ..நா எத்தல் காா்வி மேல்நிலைப்பள்ளிகள் கல்வி பணியில் மிகவும் செம்மையாக செயல்பட்டு வருகின்றன. கலை மற்றும் அறிவியல் கல்லுாாியான எஸ்.ஆா் நாயுடு கல்லுாாியும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன.
{{Distinguish|சாத்தூர் ஊராட்சி}}
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = சாத்தூர்
|latd = 9.37 |longd = 77.93
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]]
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்
|தலைவர் பெயர் = தெய்சிராணி
|உயரம் = 56
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 31274
|மக்களடர்த்தி =
|பரப்பளவு  =  3.83
|தொலைபேசி குறியீட்டு எண்  = 91 4562
|அஞ்சல் குறியீட்டு எண் = 626203
|வாகன பதிவு எண் வீச்சு = TN 67
|பின்குறிப்புகள்  =
|}}
'''சாத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Sattur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்<ref>http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=26</ref>.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.37|N|77.93|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sattur.html |title = Sattur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 56&nbsp;[[மீட்டர்]] (183&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==பெயர்க்காரணம் மற்றும் வரலாறு==
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தத்தன் எனும் பெருமாள் பக்தர் ஒருவர் இருந்தார். அவர் பெருமாள் ஆலயங்களை எல்லாம் தரிசித்து கொண்டே ஊர் ஊராக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு செல்லும் போது வழியில் ஏதேனும் நதிகளை கண்டால் தன்னுடன் எடுத்து செல்லும் பெருமாள் திருமகள் மற்றும் பூமா தேவி சிலைகளை வைத்து பூஜை செய்து பின் எடுத்துச் செல்வதை வழக்கமாக் கொண்டிருந்தார். அவ்வாறாக ஒரு சமயம் தற்போதைய சாத்தூரின் வைப்பாற்று படுகையைக் கண்டு அங்கிருந்த அரச மரத்தடியில் தான் கொண்டு வந்த சிலைகளை  வைத்து விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தார். காலை எழுந்து வழக்கம் போல பூஜைகளை முடித்து விட்டு உற்சவரின் சிலைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப முயற்சித்தார் அவரால் சிலைகளை அவ்விடம் விட்டு நகர்த்த முடியவில்லை. அப்பொழுது அருகில் இருக்கும் சாஸ்தா கோவிலில் இருந்து வருவதாக கூறிய ஒரு சிறுவன் பகவான் இவ்விடத்தில் இருக்க விரும்புகிறார். எனவே தாங்கள் அவரை இவ்விடத்திலேயே விட்டுவிடுங்கள் எனக் கூறி விட்டு மாயமானான். அந்தப் பக்தரின் பெயரால் அப்பகுதி கட்ட தத்தன் என அழைக்கப்படுகிறது.
 
சாத்தூரிலிருந்து 50 மைல் அப்பால் உள்ள சேத்தூர் ஜமீன்தார் மிகவும் பண வசதி படைத்தவர், மிக்க பெருமாள் பக்தி உடையவர். ஆனால் பிறவியிலேயே பார்வை இழந்தவர். ஒரு நாள் அவரது கனவில்  பெருமாள் தோன்றினார் . அவருக்கு அந்த அரச மரமும் தெளிவாக தெரிந்தது. ஜமீன்தார் பெருமாளைப் பார்த்து பெருமானே என்னைப் பிறவியிலேயே இரு கண்களும் தெரியாதவனாய் படைத்து விட்டாய். நான் எப்படி உன்னை சேவிப்பேன் என முறையிட்டார். உடனே பெருமாள் உனக்கு இன்று முதல் ஒரு கண் தெரியும், நீ என்னை தேடி வந்து என்னை சேவிக்கும் கணமே உனது மறு கண்ணும் உனக்கு தெரியும் என கூறினார். உடனே அந்த ஜமீன்தார் தனது ஆட்களுடன் வெங்கடப்பெருமானை தேடி புறப்பட்டார். அவர்கள் செல்லும் வழியில் தெற்கே அந்த பெருமான் இருப்பதைக் கண்ட அவரது ஆட்கள் ஜமீன்தாரிடம் சொன்னார்கள். அவர் பெருமானே என வணங்கவும் அவருக்கு மற்றொரு கண்ணும் பார்வை வந்தது. மகிழ்ந்த அந்த ஜமீன் பெருமாளுக்கு அங்கு கோவில் கட்ட எண்ணினார். ஆனால் அங்கே சரியான இடம் அமைய வில்லை. எனவே கோவிலைச் சாஸ்தா கோவில் அருகே கட்டி அந்த பகுதிக்கு சாத்தூர் எனவும் அந்த பெருமாளை சாத்தூரப்பன் எனவும் அழைத்தனர்.
 
அக் கோவில் குடமுழுக்கு விழா திருப்பதி குருக்கள் தலைமையில் சிறப்பாக நடந்தது. பெருமாள், குருக்கள் ஒருவரிடம் நான் இந்த இடத்திலிருந்து மேற்கு பகுதியில் ஒரு ஆலமரத்தின் அடியில் இருப்பதாகக் கூறி, விவரமறிந்த ஜமீன்தார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது, ஆலமரத்தடியில் வெங்கடாசலபதியைக் கண்டார். அந்த குருக்கள் இந்தப் பகுதி [[படந்தால்]] என அழைக்கபடும் எனவும் பெருமாள் குடி கொண்டிருப்பதால் தென் திருப்பதி என அழைக்கப்படும் எனவும் மொழிந்தார். இன்றும் [[படந்தால்]] மற்றும் [[சாத்தூர்]] என அருகருகே இரண்டு ஊர்களிலும் பெருமாள் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்டத் திருவிழாவின் போது சாத்தூரப்பன், [[படந்தால்]] சென்று தங்கிய பின்புதான் தேரில் எழுந்தருள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,398 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் ஆண்கள் 14,400 பெண்கள் 14,998 ஆவார்கள். 0-6 வயதில் இருக்கும் குழந்தைகள் 2,691 ஆகும். இது சாத்தூர் மக்கள் தொகையில் 9.15% ஆகும். ஆண் பெண் பாலின விகிதம் 1042. அதாவது 1000 ஆண்களுக்கு 1042 பெண்கள் உள்ளனர். இது தமிழ்நாடு மாநில சராசரியான 996-யை விட கூடுதலானது. அதேவேளையில் 0-6 வயதில் உள்ளோர் பாலின விகிதம் 913. இது மாநில சராசரியான 943-யை விட குறைவு. சாத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 86.79% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 93.03%,  பெண்களின் கல்வியறிவு 80.88% ஆகும்.<ref> [http://www.census2011.co.in/data/town/803802-sattur-tamil-nadu.html Sattur Population Census 2011] </ref> இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99% விட கூடியதே. சாத்தூரில் 8,093 வீடுகள் உள்ளன.
 
== கல்வி ==
சாத்தூரில் ஸ்ரீ ச. இராமசுவாமி நாயுடு நினைவுக் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் எட்வர்ட் மேல்நிலைப்பள்ளி மற்றும் எத்தல் ஹார்வி மேல்நிலைப்பள்ளி புகழ் பெற்றவை.
 
== தேவாலயங்கள் ==
சாத்தூரில் பல தேவாலயங்கள் உள்ளன.  
முக்கியமாக C.S.I தூய பவுலின் ஆலயம் மற்றும் ஒரு கத்தோலிக்க ஆலயம் உள்ளது.
 
==போக்குவரத்து==
ஏழாம் தேசிய நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாக செல்கிறது. இங்கு நல்ல சாலை வசதியும், பொதுப் போக்குவரத்து வசதியும் இரயில் வசதியும் உள்ளது.
 
== நீராதாரம் ==
சாத்தூரில் ''வைப்பாறு'' உள்ளது. இது பெரும்பாலும் வறண்டு காணப்படும் ஒரு காட்டாறு ஆகும். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இந்த ஆற்றில் வருடம் தோறும் கரி நாள் அன்று மக்கள் ஆற்றில் சென்று கொண்டாடுவர். அதிக அளவு [[மணல்]] அள்ளப்பட்டதாலும், கழிவு நீர் கலப்பாலும் இப்போது ஆற்றுக்குள் செல்வது இல்லை.
அதற்குப் பதிலாக ஆற்றின் அருகில் உள்ள பூங்காவில் கொண்டாடித் திரும்புகின்றார்கள்.
 
==வெளி இணைப்புகள்==
* [http://srnmcollege.com ஸ்ரீ ச. இராமசுவாமி நாய்டு மெமோரியல் கல்லூரி]
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{விருதுநகர் மாவட்டம்}}
 
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112627" இருந்து மீள்விக்கப்பட்டது