சிப்ரா குகா-முகர்ஜீ

வார்ப்புரு:Infobox scientist/Wikidata சிப்ரா குகா முகர்ஜீ (Shipra Guha-Mukherjee) (13 சூலை 1938 – 15 செப்டம்பர் 2007)[1] ஓர் இந்திய தாவரவியலாளர் ஆவார். இவர் தாவரத் திசு வளர்ச்சி, தாவர மூலக்கூற்று உயிரியல், உயிர்த்தொழில்நுட்பவியல், உயிர்க்கல மூலக்கூற்று உயிரியல் ஆகிய புலங்களில் ஆய்வுகள் மேற்கொண்டார்.[2] இவர் 2007 இல் மூளைப்புற்றால் காலமானார். இவர் திசு வளர்ச்சி வழியாக தாவர ஆக்க நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.

இளமையும் கல்வியும்

முகர்ஜீ 1938, சூலை 13 இல் கொல்கத்தாவில் பிறந்தார்.[1] இவர் மும்பையிலும் தில்லியிலும் பள்ளிக்கல்வியை முடித்தார். இவர் 1954 இல் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தாவரவியலில் தகவுறு இளம் அறிவியல் பட்டத்தில் சேர்ந்தார்.[3][3] அங்கேயே அவர் தன் மூதறிவியல் பட்டப் படிப்பையும் முடித்தார். அதே பல்கலையில் பேராசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் வெங்காயத் திசு வளர்ச்சியில் ஆய்வு மேற்கொண்டு 1963 இல் தன் முனைவர் பட்டத்தை பேரா. ஜோகிரி வழிகாட்டுதலில் பெற்றார்.[3]

இவர் கூறுகிறார்:

" நான் தாவரவியலைப் பயில முடிவெடுத்தேன்;ஏனெனில், தாவரவியல் பள்ளியில் எனக்குப் பிடித்த பாடமாய் இருந்தது. அப்போதே தாவரங்களும் விலங்குகளைப் பொல உயிருள்ளவை; அவையும் வளர்சிதைமாற்றம் செய்கின்றன என சர் சகதீழ்சு சந்திர போசு கூறிய கருத்து என்னைக் கவர்ந்து, என் எண்ணத்தில்ஆழமாகப் பதிந்துவிட்டது. தாவரங்களில் புறணிக்கலங்களின் உள்ளடுக்குத் துடிப்பு நிகழ்வால் ஊட்டக் கணிகம் மேலேறுகிறது (இது இப்போது சரியன்று என நான் அறிவேன்) எனும் அவரது கருதுகோள் எனக்குள் பெருங்கிளர்ச்சியை உருவாக்கியது. நான் முன்பு தாவரங்கள் உயிரற்ற பொருட்கள்; அவை புறத் தூண்டலுக்குத் துலங்குவதில்லையென எண்ணிகொண்டிருந்தேன். நான் ஐந்தாம், ஆறாம் வகுப்பு படிக்கும்போது, தாவரங்களின் இதயம், மூளை இரண்டும் உள்ள இடங்களைக் கண்டறிந்து, அவை எப்படி செயலாற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினேன்."[2]

ஆராய்ச்சியும் வாழ்க்கைப்பணியும்

பிறகு இவர் சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குத் திரும்பிவந்தார். புதிடாக உருவாகிய உயிர் அறிவியல் துறையில் சேர்ந்தார். இத்துறையின் இணையதள நிறுவனர்களில் இவரும் ஒருவராவார். இவர் 979 இல் பேராசிரிராக பதவி உயர்வு பெற்றார். இவர் 1993 முதல் 1995 வரை உயிர் அறிவியல் துறைப் புலமுதல்வராகப் பணியாற்றினார்.[3] இவர் இந்திய அரசு, உயிர்த் தொழில்நுட்பத் துறையின் அறிவியல் அரும்பணிஅறிவுரைக் குழுவில் உறுப்பினராப் பணியாற்றினார். இவர் இந்தியப் பல்கலைக்கழக நல்கை ஆணையத்தின் வாரியக் குழுமத்திலும் இருந்துள்ளார்.[3]

இவர் தாவரத் திசு வளர்ப்பு, தாவரக் குறுமவக எண்ணிக்கை, தாவர உயிரித் தொழில்நுட்பம் ஆகிய புலங்களில் வல்லுனர் ஆவார்.

தகைமைகளும் விருதும்

இறப்பு

இவர் இலீலாவதியின் பெண்கள் எனும் பகுதியை எழுதியதும், இவருடைய கணவரும் இரு பெண்களும் தவிக்க, 2007, செப்டம்பர் 15 இல் மூளைப்புற்றால் இறந்தார்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சிப்ரா_குகா-முகர்ஜீ&oldid=25571" இருந்து மீள்விக்கப்பட்டது