சின்ன அண்ணாமலை
சின்ன அண்ணாமலை (Chinna Annamalai, ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், பதிப்பாளர் ஆவார்[1].[2]
சின்ன அண்ணாமலை | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நாகப்பன் ஜூன் 18,1920 ஓ.சிறுவயல், சிவகங்கை மாவட்டம். தமிழ் நாடு |
இறப்பு | ஜூன் 18,1980 தேவகோட்டை |
பெற்றோர் | நாச்சியப்ப செட்டியார் - மீனாட்சி ஆச்சி |
இருப்பிடம் | கோவிலூரார் வீடு, தேவகோட்டை சிவகங்கை மாவட்டம் தமிழ் நாடு |
பணி | இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர், தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், பதிப்பாளர். |
பெயர்க் காரணம்
1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது.[3] இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[4] டி. கே. சி., கலில், டி. எஸ். சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை' பதிப்பகத்தின் பொறுப்பாளராகவும் இருந்தவர்.[5]
வாழ்க்கை வரலாறு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டதால் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி கூட்டம் போட்டதால் கைது செயபட்டார். திருவாடானை சிறையில் அடைக்கபட்ட இவரை பொதுமக்கள் சிறையை உடைத்து மீட்டனர். சிவாஜி கணேசனின் தீவிர இரசிகரான இவர் அவருக்கு இரசிகர் மன்றத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார். 18 சூன் 1980 அன்று இவரது அறுபதாம் ஆண்டு விழாவின்போது இவருக்கு நடந்த அபிசேக சடங்கின்போது ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தத்தினால் இறந்தார்.[6]
திரைப்படத் துறையில்
"தங்கமலை ரகசியம்", "நான் யார் தெரியுமா", "தர்மராஜா" போன்ற படங்களின் கதாசிரியராக சின்ன அண்ணாமலை இருந்துள்ளார். வெற்றிவேல் பிலிம்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கி "பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்", "ஆயிரம் ரூபாய்", "ஜெனரல் சக்ரவர்த்தி", "தர்மராஜா", "கடவுளின் குழந்தை" உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளர்.[7]
இயற்றியுள்ள நூல்கள்
- கண்டறியாதன கண்டேன்
- கதைக்குள்ளே கதை
- சர்க்கரைப் பந்தல்
- சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள்
- சிரிப்புக்கதைகள், தொகுத்துப்பதிப்பித்தவர் சீனி. விசுவநாதன் 1961 ஏப்ரல், மேகலைப் பதிப்பகம், சென்னை.
- சுவை நானூறு
- சொன்னால் நம்ப மாட்டீர்கள் (தன் வரலாறு)
- தலையெழுத்து
- ராஜாஜி உவமைகள்[8]
- சங்கரபதிக் கோட்டை
- காணக் கண் கோடி வேண்டும்
வெளியிட்ட நூல்கள்
சின்ன அண்ணாமலை தனது தமிழ்ப்பண்ணையின் வழியாக பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் சில:
- பாரதி பிறந்தார், கல்கி
- வ. உ. சிதம்பரனார், ம. பொ. சிவஞானம்
- அவளும் அவனும் - வெ. ராமலிங்கன்; 1944.
- சத்தியமூர்த்தி பேசுகிறார், எஸ். சத்தியமூர்த்தி; 1945 மார்ச் 28.
- நாளை உலகம் - தியாகி இராம. சடகோபன்
நடத்திய இதழ்கள்
- தமிழ் ஹரிஜன்[9]
- சிவாஜி ரசிகன்
- குமரி மலர்[10]
இவற்றையும் காண்க
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- ↑ "அரசியல் தலைவர், பதிப்பக அதிபர் சின்ன அண்ணாமலை தயாரித்த திரைப்படங்கள்". மாலை மலர் இம் மூலத்தில் இருந்து 2016-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306154958/http://www.maalaimalar.com/2012/02/10143027/politics-leader-press-owner-ci.html. பார்த்த நாள்: 20 திசம்பர் 2013.
- ↑ "60 ஆண்டு வாழ்க்கையில் 50 ஆண்டுகளை அர்ப்பணம் செய்த சின்ன அண்ணாமலை". தினமலர். http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=542&ncat=8&Print=1. பார்த்த நாள்: 20 திசம்பர் 2013.
- ↑ http://www.maalaimalar.com/2010/04/23074343/annamalai.html பரணிடப்பட்டது 2010-05-11 at the வந்தவழி இயந்திரம் மணி விழாவில் சின்ன அண்ணாமலை மரணம்
- ↑ http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-37.htm திரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
- ↑ "இந்த வாரம் கலாரசிகன்". தினமணி. http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article827039.ece?service=print. பார்த்த நாள்: 20 திசம்பர் 2013.
- ↑ புத்தகங்களைக் காதலித்தவர்கள்: பதிப்புத் துறை நால்வர் நூற்றாண்டு!, ஆசை, இந்து தமிழ், 2020 மே, 23
- ↑ "கால அட்டவணை கொடுத்த ‘கடவுளின் குழந்தை’" (in ta). 2023-06-23. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1024647-child-of-god-given-the-timetable.html.
- ↑ "au:சின்ன அண்ணாமலை". Namakkal District Central Library இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304131714/http://namakkal.tnopac.gov.in/cgi-bin/koha/opac-search.pl?q=au:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88. பார்த்த நாள்: 20 திசம்பர் 2013.
- ↑ "நூல் வெளி: ‘தமிழ் ஹரிஜன்’ தீண்டாமைக்கு எதிரான குரல்" (in ta). https://www.hindutamil.in/news/literature/942214-book-release.html.
- ↑ வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல் (மணிவாசகர் பதிப்பகம்): pp. 44-54. https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D. பார்த்த நாள்: 13 நவம்பர் 2021.
வெளி இணைப்புகள்
- சின்ன அண்ணாமலை நூல்கள் மின்நூல்வடிவில் பரணிடப்பட்டது 2013-06-28 at the வந்தவழி இயந்திரம்
- சின்ன அண்ணாமலை திருவாடனை சிறை உடைப்பு
- கல்கியும் சின்ன அண்ணாமலையும்
- 1965ல் சென்னை தேனாம்பேட்டை காங்கிரசு திடலில் நடைபெற்ற காங்கிரஸ் வரலாறு கண்காட்சி திறப்புவிழாவில் ரா. வெங்கட்ராமன் அருகில் அமர்ந்து இருப்பவர் சின்ன அண்ணாமலை புகைப்படம்
- 1966ல் சென்னையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரசு மாநாட்டில் ரா. கிருஷ்ணசாமி நாயுடு, ஜெமினி கணேசன், ரா. வெங்கட்ராமன், சின்ன அண்ணாமலை மற்றும் என் எஸ் எஸ் மன்றாடியார் ஆகியோருடன் புகைப்படம்.