சின்னையா கருப்பையா

சின்னையா கருப்பையா (பிறப்பு: 1937 இறப்பு: 1990); (மலாய்: Sinnayah Karuppiah; ஆங்கிலம்: Sinnayah Karuppiah Jayabalan) என்பவர் மலேசியாவின் முதல் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.[1] 1956-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா; மெல்பர்ன் நகரில் 13-ஆவது ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.[2]

சின்னையா கருப்பையா
தனித் தகவல்கள்
தேசியம்மலேசியர்
பிறந்த நாள்1937
இறந்த நாள்1990 (அகவை 52–53)
விளையாட்டு
விளையாட்டுஒலிம்பிக்
நிகழ்வு(கள்)திடல்தட ஓட்டம்
100 மீட்டர்

அந்த ஒலிம்பிக் நிகழ்ச்சியின் 100 மீட்டர், கள தடப் பந்தயத்தில் சின்னையா கருப்பையா கலந்து கொண்டார்.

பொது

அந்த ஒலிம்பின் போட்டி நிகழ்ச்சியில் மலாயா குழுவில் 33 பேர் போட்டியிட்டனர். இந்தியர்கள் எழுவர்:

தடகளப் போட்டி

வளைகோல் பந்தாட்டம் (ஹாக்கி)

  • சுபாத் நடராஜா
  • மாணிக்கம் சண்முகநாதன்
  • சலாம் தேவேந்திரன்
  • ராஜரத்தினம் செல்வநாயகம்
  • நோயல் அருள்

[3] மலேசியாவின் முதல் ஒலிம்பிக் 100 மீ போட்டியில், மலேசியாவைப் பிரதிநிதித்த முதல் மலேசியர்; முதல் மலேசிய இந்தியர் எனும் பெருமையைப் பெறுகின்றார்.

கூட்டரசு மலாயா ஒலிம்பிக் மன்றம்

1954-இல் அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தில் (International Olympic Committee) சேர்வதற்கு, புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டரசு மலாயா ஒலிம்பிக் மன்றத்திற்கு (Federation of Malaya Olympic Council) அனுமதி கிடைத்தது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 1896-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டாலும், அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு 1954-ஆம் ஆண்டில் தான் மலாயாவுக்கு அனுமதி கிடைத்தது.[4]

மேற்கோள்

வெளி இணைப்புகள்

  • Evans, Hilary; Gjerde, Arild; Heijmans, Jeroen; Mallon, Bill; et al. "Sinnayah Karuppiah Jarabalan Olympic Results". Olympics at Sports-Reference.com. Sports Reference LLC.


"https://tamilar.wiki/index.php?title=சின்னையா_கருப்பையா&oldid=26993" இருந்து மீள்விக்கப்பட்டது