சின்னசேலம்

சின்னசேலம் (ஆங்கிலம்:Chinnasalem), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

சின்னசேலம்
—  சிறப்புநிலை பேரூராட்சி  —
சின்னசேலம்
இருப்பிடம்: சின்னசேலம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°38′58″N 78°51′36″E / 11.649546°N 78.859863°E / 11.649546; 78.859863Coordinates: 11°38′58″N 78°51′36″E / 11.649546°N 78.859863°E / 11.649546; 78.859863
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கள்ளக்குறிச்சி
வட்டம் சின்னசேலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 27,000 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/chinnasalem
சின்ன சேலம் பேரூராட்சி அலுவலகத்தின் முகப்பு
சின்ன சேலம் தொடர் வண்டி நிலைய முகப்பு

சின்னசேலம் பேரூராட்சியானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சென்னை - கோயமுத்தூர் நகரங்களுக்கு மத்தியில் அமைந்து, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய நகரமாக உள்ளது. இந்த பேரூராட்சியில் சுமார் 150 நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரதான தொழில் அரிசி ஆலையில் அரிசி தயாரித்தல் ஆகும். மேலும் இப்பகுதியில் அதிக அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், நெல் அறுவடை இயந்திரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு இப்பகுதியில் இருந்துதான் செல்கிறது. மேலும் இந்த நகர பகுதியில் மரச்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. சின்னசேலம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

சின்னசேலம் பேரூராட்சி மாவட்டத் தலைமையிடமான விழுப்புரத்திலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ளது. சின்னசேலம் தொடருந்து நிலையம் இங்குள்ளது. இதன கிழக்கே கள்ளக்குறிச்சி 16 கிமீ; மேற்கே ஆத்தூர் 30 கிமீ; வடக்கே திருவண்ணாமலை 66 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

13.60 சகிமீ பரப்பும், 20 பேரூர் மன்ற உறுப்பினர்களையும், 145 தெருக்களையும் கொண்ட இந்தநகராட்சி சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகராட்சி 16,181 வீடுகளும், 67,106 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.4% மற்றும் பாலின விகிதம் 5 000 ஆண்களுக்கு, 4,043 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,665 மற்றும் 182 ஆகவுள்ளனர்.[4]

ஆதாரங்கள்


"https://tamilar.wiki/index.php?title=சின்னசேலம்&oldid=40363" இருந்து மீள்விக்கப்பட்டது