சித்திரம் பேசுதடி 2

சித்திரம் பேசுதடி 2 (chithiram pesuthadi-2) திரைப்படத்தை ராஜன் மாதவ் இயக்கியுள்ளார். இது 2019 ஆம் ஆண்டில் வெளியாகலாம் எனக் கருதப்படுகிறது. இப்படத்தில் நடிகர்கள் விதார்த், அஜ்மல் அமீர், அசோக், நிவாஸ் ஆதித்தன் மற்றும் நடிகைகள் காயத்ரி, ராதிகா ஆப்தே, நிவேதிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் நந்தன் மற்றும் நடிகை பிரியா பானர்ஜி ஆகியோர் அறிமுகமாகின்றனர்[1]. முன்னதாக தமன் இசையமைப்பாளராகவும், பிரவீன்.கே. எல்.- எமன். பி. ஸ்ரீகாந்த் ஆகியோர் படத்தொகுப்பாளர்களாக முடிவெடுக்கப்பட்டது. பின்னர் இசையமைப்பாளர் சாஜன் மாதவ், ஒளிப்பதிவாளர் பத்மேஷ் மற்றும் படத்தொகுப்பாளர் கே. வெங்கட்ரமணன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பங்களித்துள்ளனர்[2]. 48 மணிநேரங்களில் நடக்கும் நான்கு வெவ்வேறு கதைகளின் இணைப்பு தான் இப்படத்தின் கதைக்களம் ஆகும்[3]

சித்திரம் பேசுதடி 2
இயக்கம்ராஜன் மாதவ்
கதைராஜன் மாதவ்
இசைசாஜன் மாதவ்
நடிப்புவிதார்த்
அஜ்மல் அமீர்
அசோக்
காயத்ரி
ராதிகா ஆப்தே
நிவேதிதா
நிவாஸ் ஆதித்தன்
ஒளிப்பதிவுபத்மேஷ்
படத்தொகுப்புK வெங்கட்ரமணன்
கலையகம்ட்ரீம் பிரிட்ஜ் புரோடக்‌ஷன்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

நடிகர்கள் பிரசன்னா, நரேன் அவர்களுக்குப் பதிலாக நடிகர்கள் அஜ்மல் அமீர், அசோக் நடித்துள்ளனர். நடிகை காயத்ரி முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் அஜ்மல் அமீர்க்கு கதாநாயகியாக நடிகை பிரியா பானர்ஜி நடித்துள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கி இப்படத்திற்கு பாடல்களை இயற்றியுள்ளார். மேற்கிந்திய மட்டைப்பந்து அணியின் புகழ்பெற்ற பந்து வீச்சாளரான டுவைன் பிராவோ சிறப்பு தோற்றமாக வருகை தந்துள்ளார்.

இப்படம் 2013ஆம் ஆண்டில் உலா என்கிற தலைப்பில் சென்னையிலும் அதன் சுற்றுப்புற இடங்களில் உருவாக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டில் திரையிடுவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் 2006ஆம் ஆண்டில் வெற்றிகண்ட திரைப்படமான சித்திரம் பேசுதடி மூலம் இப்படத்தின் தலைப்பு 'உலா'விலிருந்து சித்திரம் பேசுதடி 2 என்று மாற்றப்பட்டது. இக்கதை சித்திரம் பேசுதடி திரைப்படத்திற்கும் எவ்வித சம்மதமில்லை. இரண்டு படங்களும் வெவ்வேறு திரைக்கதைகளைக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=சித்திரம்_பேசுதடி_2&oldid=33256" இருந்து மீள்விக்கப்பட்டது