சித்தார்த் (நடிகர்)

சித்தார்த் மேனன் என்பவர் தமிழ்நாட்டு தொலைக்காட்சி நடிகர் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அழகிய தமிழ் மகன்' என்ற போட்டி நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் மூலம் சின்னத்திரைக்கு நடிகராக அறிமுகமானார். 'என் பெயர் மீனாட்சி' (2010-2011), ஆபீஸ் (2014-2015), றெக்கை கட்டி பறக்குது மனசு (2017-2019) போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

சித்தார்த்
பிறப்புசித்தார்த் மேனன்
சென்னை, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிமாதிரி நடிகர், நடனக் கலைஞர், தொலைக்காட்சி நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பிரியதர்ஷினி (தற்போது வரை)

2018ஆம் ஆண்டு 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியில் அணைத்து சுற்றிலும் சிறந்தவர் என்ற சிறப்பு விருதும் வென்றுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

சித்தார்த் மேனன் சென்னை தமிழ்நாட்டில் ஒரு மலையாளி குடும்பத்தில் மகனாக பிறந்தார். 2010ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி நடத்திய ஆண்களுக்கான போட்டி நிகழ்ச்சியான அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். இதன் வாயிலாக நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். இவரின் மனைவி பெயர் பிரியதர்ஷினி. இருவரும் ஒன்றாக இணைத்து 2018 இல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரு & திருமதி கில்லாடிஸ் என்ற கணவன் மனைவி போட்டி விளையாட்டு நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியும் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2010 அழகிய தமிழ் மகன் போட்டியாளராக விஜய் தொலைக்காட்சி
2010-2011 என் பெயர் மீனாட்சி சக்தி
2013-2016 சரவணன் மீனாட்சி 2 வைத்தீஸ்வரன்
2014-2015 கல்யாணம் முதல் காதல் வரை
ஆபீஸ் கமல்
2014 ஜோடி நம்பர் 1 பகுதி 7 போட்டியாளராக
2016 அச்சம் தவிர்
2016-2017 டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜீ தமிழ்
2017-2019 றெக்கை கட்டி பறக்குது மனசு தமிழ்
2019-–ஒளிபரப்பில் தேன்மொழி பி.ஏ விஜய் தொலைக்காட்சி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சித்தார்த்_(நடிகர்)&oldid=23635" இருந்து மீள்விக்கப்பட்டது