சிங்கார வேலன் (திரைப்படம்)
சிங்கார வேலன் (Singaravelan) 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். வி. உதயகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், குஷ்பூ மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சிங்கார வேலன் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
தயாரிப்பு | ஆர்.டி. பாஸ்கர் |
கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் குஷ்பூ ஜெய்சங்கர் |
ஒளிப்பதிவு | அப்துல் ரகுமான் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
வெளியீடு | 13 ஏப்ரல் 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கங்கை அமரன், பொன்னடியான், ஆர். வி. உதயகுமார், வாலி ஆகியோரின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - சிங்கார வேலன்
- குஷ்பூ - சுமதி
- ஜெய்சங்கர் - ஜெனரல் நடராஜன்
- மனோரமா - தாயம்மா
- மனோ - மனோ
- கவுண்டமணி - டிரம்ஸ் மணி
- வடிவேலு - சுபா
- சார்லி - ராமசாமி
- சுமித்ரா - பார்வதி
- விஜயகுமார் - வேலனின் அப்பாவாக (சிறப்புத் தோற்றம்)
- வி. கே. ராமசாமி - காளியண்ணன் கவுண்டர்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- வினு சக்ரவர்த்தி
- நிழல்கள் ரவி - 'சின்சியர்' சிவமணி
- அஜய் ரத்னம்
- பீலிசிவம் - காவல் ஆய்வாளர்
- எஸ். ஆர். வீரராகவன் - காவல் ஆணையர்
- சாமிநாதன் - காவலர்
- மலேசியா வாசுதேவன் - சுமதியின் தந்தை (சிறப்பு தோற்றம்)
- சி. ஆர். சரஸ்வதி - சுமதியின் தாயார் (சிறப்பு தோற்றம்)
- சண்முகசுந்தரம் - (சிறப்பு தோற்றம்)
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - கல்யாண தரகர் (சிறப்பு தோற்றம்)
- ஜி.கே.வெங்கடேஷ் - உணவகத்தில் கர்நாடகா இசை வாசிப்பவராக (சிறப்பு தோற்றம்)[1]
- சங்கிலி முருகன்
- பாவலர் மைந்தன்
- ஜே.சந்தானம்
- ராஜா
- அருள்மணி
- ராமமூர்த்தி
- விக்கி
- லட்சுமி
பாடல்கள்
இத்திரைப்படம் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | பாடலாசிரியர் |
---|---|---|---|---|
1 | போட்டுவைத்த காதல் | கமல்ஹாசன், மனோ | 05:00 | வாலி |
2 | இன்னும் என்னை | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:03 | ஆர். வி. உதயகுமார் |
3 | ஓ ரங்கா ஸ்ரீரங்கா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், | 05:11 | வாலி |
4 | புதுச்சேரி கச்சேரி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 06:22 | வாலி |
5 | சொன்னபடி கேளு | கமல்ஹாசன் | 05:13 | வாலி |
6 | தூது செல்வதாரடி | எஸ். ஜானகி | 02:26 | பொன்னடியான் |
7 | புதுச்சேரி கச்சேரி (சோகம்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 02:03 | வாலி |
மேற்கோள்கள்
- ↑ "இளையராஜாவின் ராஜா... ஜி.கே.வெங்கடேஷ்! - 'தேன் சிந்துதே வானம்' தந்த இசைமேதை!". இந்து தமிழ். 21 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/581800-g-k-venkatesh-birthday-ilayaraaja.html. பார்த்த நாள்: 22 செப்டம்பர் 2020.
- ↑ http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000160