சாய்பிரியா தேவா
சாய்பிரியா தேவா (Saipriya Deva) தமிழ் திரைப்படங்களில் அதிகமாக நடித்துவரும் ஓர் இந்திய நடிகை ஆவார்.[1]
சாய்பிரியா தேவா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சாய்பிரியா தேவா |
---|---|
பணி | நடிகை, வடிவழகி |
தேசியம் | இந்தியர் |
தொழில்
சாய் பிரியா தேவாவின் குடும்பம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக் காலமாக திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இவரது கொள்ளு தாத்தா திரைத்துறை தொடர்பினைத் தொடங்கினார் மற்றும் தாத்தா (வி. எம். பரமசிவ முதலியார் சென்னை தங்க சாலை தெருவில் இருந்த முருகன் திரையரங்கின் உரிமையாளராக இருந்தார்.[1] பி. வாசு இயக்கி 2017ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமான சிவலிங்காவில் சாய்பிரியா தேவா அறிமுகமானார்.[2] இவர் மலையாளத் திரைப்படமான என்டே உம்மண்டே பேரு (2018) என்ற மலையாளத் திரைப்படத்திலும் நடித்தார்.
திரைப்படவியல்
- குறிப்பு: என்டே உம்மண்டே பேரு தவிர பிற அனைத்து படங்களும் தமிழில் வெளிவந்தன.
ஆண்டு | படம் | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2017 | சிவலிங்கா | சங்கீதா | |
2018 | என்டே உம்மண்டே பேரு | சைனாபா | மலையாளம் படம் |
2021 | பூம் பூம் காளை | ||
2022 | யுத சதம் | ராகவி | [3] |
2023 | டைனோசர்ஸ் | தீபா | |
2024 | பாம்பாட்டம் | நாகமதி | [4] |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "I cried and fought with my family to get into films: Saipriya Deva". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/i-cried-and-fought-with-my-family-to-get-into-films-saara/articleshow/56811313.cms. பார்த்த நாள்: 23 November 2017.
- ↑ "Two-time lucky". 17 December 2018. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/171218/two-time-lucky.html.
- ↑ "Yutha Satham Movie Review: More noise, less substance" (in en). https://www.cinemaexpress.com/tamil/review/2022/mar/18/yutha-satham-movie-review-parthiban-gautham-karthik-ezhil-rating-30364.html.
- ↑ "Pambattam Trailer (Tamil) | Jeevan, Mallika Sherawat | V C Vadivudaiyan | Vaithiyanathan Film Gardenn". https://www.youtube.com/watch?v=NjqHPelmOYc.