சானூர் சனா

சானூர் சனா பேகம் (Shanoor Sana) சனா என்ற தனது பெயரிலான மேடைப் பெயரால் பிரபலமாக அறியப்படும் இவர் இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி ஆளுமையும், வடிவழகியுமாவார். இவர், முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். [1] சில தமிழ், கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் பெரும்பாலும் துணை வேடங்களிலேயே நடித்துள்ளார். [2]

சானூர் சனா
பிறப்புசானூர் சனா பேகம்
ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர், வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
1994 - தற்போது வரை
சொந்த ஊர்ஐதராபாத்து
வாழ்க்கைத்
துணை
சதாத்
பிள்ளைகள்2
சையது அன்வர் அகமது (மகன்)
உறவினர்கள்சமீரா செரிப் (மருமகள்)

சுயசரிதை

இவர் ஆந்திராவின் ஐதராபாத்தின் ஒரு கிறிஸ்தவத் தந்தைக்கும், முஸ்லிம் தாய்க்கும் பிறந்தார். தனது படிப்பை முடிப்பதற்கு முன்பே தனது பதின்பருவத்திலேயே சதாத் என்பவரை மணந்தார். [3] இவர்களது மகன் சையத் அன்வர் அகமது ஒரு திரைப்பட தயாரிப்பாளராக இருக்கிறார். இவரது மருமகள் சமீரா செரிப் ஒரு தொலைக்காட்சி நடிகையாக இருக்கிறார். [4]

தொழில்

ஆரம்பத்தில் வடிவழகுத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். தொலைக்காட்சி மற்றும் விளம்பரப் பணிகளில் பணியாற்றி வந்தபோது இயக்குனர் கிருஷ்ண வம்சியிடமிருந்து திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் கிருஷ்ண வம்சி தனது 1996 ஆம் ஆண்டு நின்னி பெல்லாடுதா திரைப்படத்தில் துணை வேடத்தில் இவரை நடிக்க வைத்தார் . [5] இந்த படம் வணிக ரீதியாக வெற்றிப் பெற்று பாராட்டப்பட்டது. இதில் அக்கினேனி நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அதன் பின்னர் இவர் பெரும்பாலும் தெலுங்குப் படங்களில் துணை நடிகையாக தோன்றினார். 2011ஆம் ஆண்டு ஸ்ரீ ராம ராஜ்யம் திரைப்படத்தில் கைகேயி வேடத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. மேலும் 2011 ஆம் ஆண்டு ராஜபாட்டை திரைப்படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். 2018ஆம் ஆண்டில், தமிழ் குடும்பத் நாடகத் தொடரான பொன்மகள் வந்தாள் மூலம் தமிழ் தொலைக்காட்சி நடிப்பில் அறிமுகமானார். [6]

மே 2020 இல், தனது மருமகள் சமீரா செரிப்புடன் சமையல் முறைகளை கற்பிக்கும் தனது சொந்த யூடியூப் சேனலைத் தொடங்கினார். [7]

மேற்கோள்கள்

  1. kavirayani, suresh (2020-05-03). "Shanoor Sana flaunts her culinary skills" (in en). https://www.deccanchronicle.com/sunday-chronicle/leisure/030520/shanoor-sana-flaunts-her-culinary-skills.html. 
  2. "Shanoor Sana Begum" (in en-US). 2018-09-03 இம் மூலத்தில் இருந்து 2020-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200519135357/https://www.onenov.in/shanoor-sana-begum-actress/. 
  3. "The Ultimate Support System". https://www.newindianexpress.com/cities/hyderabad/2016/mar/19/The-Ultimate-Support-System-913274.html. 
  4. "Syed Anwar surprises birthday girl Sameera Sherief on their honeymoon; take a look" (in en). https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/syed-anwar-surprises-birthday-girl-sameera-sherief-on-their-honeymoon-take-a-look/articleshow/72072624.cms. 
  5. kavirayani, suresh (2014-03-26). "The surprising Sana" (in en). https://www.deccanchronicle.com/140325/entertainment-tollywood/article/surprising-sana. 
  6. "Shanoor Sana Begum flaunts her Bharatanatyam skills; See video - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/shanoor-sana-begum-flaunts-her-bharatanatyam-skills-see-video/articleshow/66380029.cms. 
  7. "Actress Sana: ఈసారి స్వీట్ తినిపిస్తానంటున్న సనా, సమీరా! డబుల్ కా మీఠా ఈజీ రెసిపీ" (in te). https://telugu.samayam.com/tv/news/shanoor-sana-and-sameera-sheriefs-ramadan-special-hyderabadi-double-ka-meetha-taste-it/articleshow/75850697.cms. 
"https://tamilar.wiki/index.php?title=சானூர்_சனா&oldid=22727" இருந்து மீள்விக்கப்பட்டது