சாந்தி ரமேஸ்
சாந்தி ரமேஸ் | |
---|---|
முழுப்பெயர் | சாந்தி |
ரமேஸ் | |
தேசியம் | இலங்கைத் தமிழர், |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
சாந்தி நேசக்கரம் செருமனியில் வசிக்கின்ற ஈழத்து எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
சாந்தி யாழ் மாவட்டம் வலிகாமம் வடக்கு பலாலியை அண்டிய குப்பிளான் என்ற சிறு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையார் அரசியலில் ஈடுபட்டவர். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர். இடம்பெயர்ந்து செருமனியில் , மகன் பார்த்திபன், மகள் வவுனீத்தா ஆகியோருடன் வசித்து வருகிறார். ஈழத்தின் வடக்குக் கிழக்குப்பகுதி மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டு "நேசக்கரம்" என்ற அமைப்பை உருவாக்கி, உதவிப் பணிகளைச் செய்து வருகிறார்.
எழுத்துலகில்
சாந்தி எழுதத் தொடங்கியது 13வயதில். 1990 இல் விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்துடனான தொடர்பு அவரை குறிப்பிடத்தக்க எழுத்தாளராக்கியது. கவிதை, நாடகம், சிறுகதையெனப் பலவற்றை எழுதினார்.
வெளியிட்ட நூல்கள்
- இன்னொருகாத்திருப்பு (கவிதைத்தொகுப்பு-2000)
- அழியாத ஞாபகங்கள் (கவிதைத்தொகுப்பு 2001)
- கலையாத நினைவுகள் (சிறுகதைத்தொகுப்பு 2002)
- உயிர்வாசம் (கவிதைத்தொகுப்பு 2005)
- கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு (கவிதைத்தொகுப்பு 2012)
- உயிரணை (நாவல் 2016)