சாசனமும் தமிழும் (நூல்)

சாசனமும் தமிழும் என்பது கல்வெட்டுகளில் தமிழின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும் அரிய[சான்று தேவை] நூலாகும். இந்நூலை கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை எழுதியுள்ளார். இந்த நூலில் கல்வெட்டுகளில் உள்ள தமிழ்வரி வடிவம், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் வழக்காறுகள், இலங்கையில் கிடைக்கும் கல்வெட்டுகள் பற்றிய மதிப்பீடுகள் என்பன தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகளின் துணையுடன் மொழி, இலக்கியம் பற்றி ஆராயப்பட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள சொல், சொற்றொடர், செய்திகள் அடிப்படையில் மொழியமைப்பு, இலக்கணம் பற்றிய ஆய்வு நூலாக இது உள்ளது. இந்த நூலின் இறுதிப்பகுதிகள் குறிப்பிடத் தகுந்த சிறப்பிற்கு உரியன. கல்வெட்டுகளின் துணைகொண்டு இலங்கையில் தமிழர்கள் பெற்றிருந்த செல்வாக்கு விளக்கப்பட்டுள்ளது.

சாசனமும் தமிழும்
நூல் பெயர்:சாசனமும் தமிழும்
ஆசிரியர்(கள்):கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை
வகை:ஆய்வு நூல்
துறை:கல்வெட்டுகளில் தமிழின் நிலை
காலம்:1971
மொழி:தமிழ்
பக்கங்கள்:368
பதிப்பு:ஏப்ரல், 1971
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாசனமும்_தமிழும்_(நூல்)&oldid=15148" இருந்து மீள்விக்கப்பட்டது