சாக்தம்

சாக்தம் சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயம் ஆகும். சக்தியே தெய்வம், அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது. இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை, குங்குமம் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு.

சக்தியே முழு முதற் கடவுள் என்றும் அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்து இருக்கும் சக்தி அனைத்துலகத்தையும் படைத்து, காத்து, தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது இவர்களின் கருத்து ஆகும்.

பிரிவுகள்

சாக்தர்களில் இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன.

  • வாமாசாரர்கள்,
  • தட்சிணசாரர்கள்[1].

வாமாசாரர்கள்

வாமாசாரர்கள் கெளலிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேதங்கள் கூறும் வழிபாட்டு விதிகளை பின்பற்றாமல், தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப விதிகளை உருவாக்கிக் கொள்வர்.

தட்சிணாசாரர்கள்

இவர்கள் ஸ்ரீ வித்யோபாசகர்கள் அல்லது வைதிகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேதத்தினை பின்பற்றுபவர்கள் ஆவர்.சந்தியாவந்தனம், மூதாதயர்களுக்கு கடன் செலுத்துதல், வேள்விகள் செய்தல் போன்றவற்றை பின்பறுபவர்கள் ஆவர்.

சாக்த கோவில்கள்

சதி தேவியான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த 51 சக்தி பீடங்கள் சக்தி வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

திருவிழாக்கள்

மேற்கோள்கள்

  1. முனைவர் சுயம்பு எழுதிய இந்தியாவில் சமயங்கள் புத்தகம்.பக்கம்-48
"https://tamilar.wiki/index.php?title=சாக்தம்&oldid=130065" இருந்து மீள்விக்கப்பட்டது