சர்வம் சக்திமயம்

சர்வம் சக்திமயம் (Sarvam sakthimayam) 1986 ஆம் ஆண்டு ராஜேஷ் மற்றும் சுதா சந்திரன் நடிப்பில், பி. ஆர். சோமசுந்தர் இயக்கத்தில், பென் சுரேந்தர் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2]

சர்வம் சக்திமயம்
இயக்கம்பி. ஆர். சோமசுந்தர்
இசைபென் சுரேந்தர்
நடிப்புராஜேஷ்
சுதா சந்திரன்
எஸ். வி. சேகர்
மனோரமா
ராதாரவி
ரம்யா கிருஷ்ணன்
வெளியீடு1986
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தாய் தந்தையற்ற அனாதையான நடராஜ் (ராஜேஷ்) தன் உறவினரான ராஜம்மா வீட்டில் வளர்கிறான். ஒரு கோயிலில் சிவகாமியைப் (சுதா சந்திரன)) பார்த்து காதல்வயப்படுகிறான். சிவகாமி தெய்வபக்தி நிறைந்தவள். ஒரு விபத்தில் அவளது ஒரு காலை இழந்த சிவகாமி, ராஜேஷின் காதல் உண்மையானதா என்று சந்தேகிக்கிறாள். ஆனாலும் தன் காதலில் உறுதியாக இருக்கும் ராஜேஷ் சிவகாமியைத் திருமணம் செய்து கொள்கிறான்.

ராஜம்மாவிற்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. நடராஜுக்குத் திருமணம் செய்யும்போது அதிக வரதட்சணை பெறத் திட்டமிட்டிருந்த அவளுக்கு இத்திருமணம் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. எனவே இருவருக்கும் எதிராக சதிசெய்யத் தொடங்கினாள். சிவகாமி கருத்தரித்த இருமுறையும் தன் உறவினர் பாலு மூலம், சிவகாமி குடிக்கும் பானங்களில் கருவைக் கலைக்கும் மருந்தைக் கலந்து சிவகாமியைக் குடிக்கச்செய்து கருவைக் கலைக்கிறாள். இது ராஜம்மாவின் சதிவேலை என்றறியாத நடராஜ் மற்றும் சிவகாமி இயற்கையாக நிகழ்ந்ததாக எண்ணுகின்றனர்.

ஒருநாள் இருவரும் ஒரு கோயில் கோபுரத்தைப் பார்க்கின்றனர். அக்கோயில் மக்களால் "கொலைகாரக் காளியம்மன்" கோயில் என்று அழைக்கப்படுகிறது. 10 வருடங்களுக்கு முன் அக்கோயிலில் மர்மமான முறையில் பலர் இறந்துபோவதால் அவ்வூர் மக்கள் அப்பெயரிட்டு அழைக்கின்றனர். அங்கு செல்லவே அஞ்சுகின்றனர். இதனால் பாழடைந்த நிலையில் இருக்கும் கோயிலை இருவரும் சுத்தப்படுத்துகின்றனர். தங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அவர்கள் அதற்காக இக்கோயிலைப் புதுப்பித்துத் தருவதாக வேண்டிக்கொள்கின்றனர்.

அதன் பிறகு அக்கோயிலின் தெய்வமான காளியம்மனே நடராஜ் - சிவகாமிக்கு மகளாக பிறக்கிறாள். அவளுக்கு தேவி என்று பெயரிடுகின்றனர். தெய்வ அருள் பெற்றக் குழந்தையான தேவி, ராஜம்மா மற்றும் பாலுவுக்குத் தக்க தண்டனை வழங்கி பாடம் புகட்டுகிறாள். இறுதியில் காளியம்மனைச் சேரும் தேவி, நடராஜ் - சிவகாமியின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆசிர்வதிக்கிறாள்.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் பென் சுரேந்தர்.

  • சங்கீத சௌபாக்யமே
  • வந்தேனே
  • அருள்மழை பொழியும்
  • தேவி ஸ்ரீதேவி
  • சர்வம் சக்திமயம்
  • மகாகாளி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சர்வம்_சக்திமயம்&oldid=33114" இருந்து மீள்விக்கப்பட்டது