சரோஜா ராமாமிருதம்

சரோஜா ராமாமிருதம் (28 சனவரி 1931 – 14 அக்டோபர் 2019[1]) என்பவர் பேபி சரோஜா என்னும் பெயரில் 1930களில் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் பாலயோகினி (1937), தியாகபூமி (1939), காமதேனு (1941) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]

சரோஜா ராமாமிருதம்
Balayogini 1937film 2.jpg
பாலயோகினி திரைப்படத்தில் பேபி சரோஜா
பிறப்புபேபி சரோஜா
1931
சென்னை
தமிழ் நாடு
இந்தியா
இருப்பிடம்சென்னை
தேசியம் இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1937 முதல் 1941 வரை
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
வி. ராமாமிருதம்
பிள்ளைகள்இரண்டு மகன்
ஒரு மகள்

வாழ்க்கைச் சுருக்கம்

பிரபல திரைப்பட இயக்குனர் கே. சுப்பிரமணியத்தின் சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பேபி சரோஜா நடித்த மூன்று திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியமே தயாரித்திருந்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.[3] அக்காலகட்டத்தில் கலிபோர்னியா மாநிலம் சாந்தா மொனிக்காவைச் சேர்ந்த ஷெர்லி டெம்பிள் என்ற குழந்தை நட்சத்திரம், பிரமாதமான நடிப்பால் உலகப் புகழ் பெற்றிருந்தார். அதே சமயம் இந்தியாவில் சரோஜா அவர்கள் தன் நடிப்புத் திரமையைக் கொண்டு எல்லோராலும் பாராட்டப் பட்டு இந்தியாவின் ஷிர்லி டெம்பிள் என்று மக்களால் போற்றப்பட்டார். மேலும் அப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில பெண் குழந்தைகளுக்குப் ”சரோஜ” என்று பெயர் சூட்டினார்கள்.[4] மேலும் பேபி சரோஜா சோப், சரோஜா பவுடர் என வணிகப் பொருட்களிலும் இடம்பெற்றார். அதேபோல கைப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றிலும் சரோஜாவின் ஒளிப்படம் இடம்பெற்றது.[5]

இறப்பு

பேபி சரோஜா மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் 2019 அக்டோபர் 14 ஆம் நாள் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 88.[1][6]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Girl who was named Shirley Temple of India". டைம்ஸ் ஒவ் இந்தியா. 16 அக்டோபர் 2019 இம் மூலத்தில் இருந்து 2019-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20191016042140/https://timesofindia.indiatimes.com/city/chennai/girl-who-was-named-shirley-temple-of-india/articleshow/71605051.cms. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2019. 
  2. "MEMORIES OF MADRAS Beachside story". தி இந்து. ஏப்ரல் 29, 2009. Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 13, 2013.
  3. Kamadhenu 1941, ராண்டார் கை, தி இந்து, செப்டம்பர் 23, 2012
  4. "திரைப்படத் துறையில் கே.சுப்பிரமணியம் நடத்திய புரட்சி!". மாலை மலர். 16 பெப்ரவரி 2013. Archived from the original on 23 பெப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2013.
  5. சரோஜா சோப் சரோஜா பவுடர் சரோஜா கண் மை! பாலயோகினி இந்து தமிழ் திசை, 5, பெப்ரவரி, 2024
  6. சரோஜினி. "30 களின் பிரபல குழந்தை நட்சத்திரம் பேபி சரோஜா மறைவு". தினமணி இம் மூலத்தில் இருந்து 2019-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191016050212/https://www.dinamani.com/cinema/cinema-news/2019/oct/15/baby-saroja-shirley-temple-of-india-died-at-88-3254610.html. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2019. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சரோஜா_ராமாமிருதம்&oldid=22676" இருந்து மீள்விக்கப்பட்டது