சமண முனிவர்கள்

சமண முனிவர்கள் என்பது சமண மத முனிவர்களைக் குறிக்கும்.

நாலடியார் என்னும் நூல் சமண முனிவர்கள் பலரால் பாடப்பட்ட வெண்பாப் பாடல்கள் பலவற்றின் தொகுப்பு.[1][2] தனிப்பாடல்களில் காணப்படும் குறிப்பு [3][4] ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வாறு கொள்ளப்படுவதாக நாலடியார் நூலுக்கு உரை எழுதிய ஆசிரியர் தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.[5][6]

மேற்கோள்

  1. பல புலவர்கள் - பல்வேறு நிகழ்வுகள்
  2. சமண முனிவர்கள் பலரால்
  3. எண் பெரும் குன்றத்து எணாஅயிரம்இருடி
    பண் பொருந்தப் பாடிய பா நானூறும்
  4. 'வெள்ளாண் மரபுக்கு வேதம்' எனச்சான்றோர்
    எல்லாரும் கூடி எடுத்துரைத்த, சொல்ஆரும்,
    நாலடி நானூறும் நன்கு இனிதா என்மனத்தே
    சீலமுடன் நிற்க, தெளிந்து.
  5. தமிழ் இணையக் கல்விக்கழகப் பதிப்பு
  6. பாண்டி நாட்டில் பல்ல ஆண்டுகள் மழை இல்லாமல் மக்கள் உணவுக்கே துன்புறும் காலத்தில் மன்னன் சமண முனிவர்கள் அனைவரையும் அழைத்து அனைவரும் செழிப்புள்ள நாட்டுக்குச் சென்று வாழுங்கள்; பாண்டி செழித்த பின்னர் திரும்பலாம் என்று கூறியபோது, பாண்டி நாட்டிலிருந்த சமண முனிவர்கள் எண்ணாயிரவர் ஒவ்வொருவரும் ஒரு வெண்பா எழுதிய ஓலையைத் தம் இருக்கையில் வைத்துவிட்டுச் சென்றதாகவும், மன்னன் மழை பெய்யாத வெறுப்பில் அவற்றை வையை ஆற்றில் வீசிவிட்டதாகவும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் மழை பெய்தபோது அவற்றில் 400 ஓலைகள் மட்டும் நீரோட்டத்தில் செல்லாமல் நீரை எதிர்த்து நின்றதாகவும், அவற்றின் தொகுப்பே நாலடியார் நூல் என்றும் வழிவழியாகக் கூறும் கதை ஒன்று உண்டு.
"https://tamilar.wiki/index.php?title=சமண_முனிவர்கள்&oldid=18292" இருந்து மீள்விக்கப்பட்டது