சப்தகந்த அடியார்
சப்தகந்த அடியார் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார்.[1] இவர் திருவண்ணாமலையை ஏழு முறை கிரிவலம் வருவதும், மாதத்தில் ஏழு நாட்கள் மட்டுமே உணவு உட்கொள்வதுமென இருந்துள்ளார். ஏழு நாட்கள் தவிற பிற நாட்களில் உண்ணா நோம்பு இருந்துள்ளார்.
இவரது உடலில் ஒருவித நறுமணம் வீசுமெனவும், இவரது தலைமுடி தங்க இழைபோல் இருக்குமெனவும் நம்பப்படுகிறது. இவரது தலைமுடிகள் உதிர்ந்த இடங்களில் ஏழு சிவலிங்கள் தோன்றியதாகவும், அந்த லிங்கங்கள் சப்தகந்த லிங்கங்கள் எனவும் அழைக்கப்பட்டன. தலைமுடி உதிரும் இடங்களில் இறைவனே தோன்றி முதல் கந்தம் முற்றியது. இரண்டாம் கந்தம் முற்றியது என கூறுவாராம்.