சந்திரா ரணராஜ

சந்திரா ரணராஜ (Chandra Ranaraja, பி. 1939 – இ. 2 March 2016) இலங்கையின் முதல் பெண் மேயர் ஆவார். 1990 இல் இவர் கண்டியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

குடும்பம்

சந்திரா, குடும்பத்தின் ஏழு குழந்தைகளில் மூத்தவராக 1939 இல் அனுராதபுரத்தில் பிறந்தார்.[3] இவருடைய தாத்தா, டி. பி. பி. மகாதியூல்வேவா, பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த இலங்கையின் சிறு கிராமங்களில் வழக்குகளைத் தீர்க்கும் நடுவர்களின் தலைவராக இருந்தார். இவரின் தந்தை எஸ். ஹெச். மகாதியூல்வேவா இலங்கையின் அனுராத புரத்தில் கச்சேரி முதலியாராகவும், 1947 முதல் 1952 வரை கலவெவை தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[3]

கல்வி

சந்திரா, கண்டியில் ஹில்வுட் கல்லூரியில் பயின்றார்.[4] இவர், வடக்கு மத்தியப் பிராந்தியத்திலிருந்து முதன்முதலில் பேராதனை கல்லூரிக்குச் சென்ற முதல் பெண்மணி ஆவார். 1961 இல் ஆசிரியர் படிப்பில் பட்டம் பெற்றார்.[3] அனுராத புரத்தில் இருந்த ஹோலி பேமிலி கான்வெண்ட் என்ற பள்ளியில் இவர் தனது முதல் கற்பித்தல் பணியைத் தொடங்கினார்.[3] செங்கடகலா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்டன் ரணராஜ[5] என்பவரை மணந்த பின் கண்டிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு கண்டி மகளிர் பள்ளியில் ஆசிர்யர் பணியில் சேர்ந்தார்.[3][4] இவருடைய ஐந்து குழந்தைகளைக் கவனித்துக்கொள்வதற்காகப் பணிக்குச் சென்றார். பெரிமளா, அருணை, இரட்டையர்களான சிரோமி- சாமிளா, அஞ்சலி ஆகியோர் இவருடைய மக்களாவர்[3] .

பணிகள்

1978 இல் சந்திரா ரணராஜ பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முதல் குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.[6] பின்னர் உள்ளூர் அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கண்டியின் நகராட்சிக் குழுவுக்கானத் தேர்தலில் வெற்றி பெற்று அதன் உறுப்பினரானார்.[4] 1979 முதல் 1989 வரை தொடர்ந்து துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 இல் கண்டியின் முதல் பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையின் முதல் பெண் மேயர் இவரே ஆவார்.[3][7] சந்திரா தன்னுடைய பதவிக்காலத்தில் கண்டியின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் பேணுவதிலும் நல்ல வழக்குரைஞராக உறுதியுடன் செயல்பட்டார்.[8] இவருடைய மகள் அருணை பிலிப்பைன்சு நாட்டின் தூதராக உள்ளார்.[9] சந்திரா ரத்னராஜ 2016 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் நாள் தனது 77 ஆம் வயதில் இறந்தார்.

மேற்கோள்கள்

  1. Chitra Wijesekera (1995). Women in Our Legislature. Sarvodaya Vishva Lekha. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9559579703. 
  2. "Chandra Ranaraja, former Mayor of Kandy passes away". Sunday Times. 3 March 2016 இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170113001917/http://www.sundaytimes.lk/97097/chandra-ranaraja-former-mayor-of-kandy-passes-away. பார்த்த நாள்: 9 January 2017. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Dharmadasa, Sumangalika (20 March 2016). "Chandra Ranaraja (nee Mahadiulwewa)". The Island இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170116163615/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=142275. பார்த்த நாள்: 9 January 2017. 
  4. 4.0 4.1 4.2 Wimalasurendre, Cyril (3 March 2016). "Chandra Ranaraja dead". The Island இம் மூலத்தில் இருந்து 17 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170217142859/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=141400. பார்த்த நாள்: 9 January 2017. 
  5. "Shelton Ranaraja : Principled Politician and Conscience-Keeper of the Nation". Daily Mirror. 8 June 2016. http://www.dailymirror.lk/article/Shelton-Ranaraja-Principled-Politician-and-Conscience-Keeper-of-the-Nation-113690.html. பார்த்த நாள்: 9 January 2017. 
  6. University of Ceylon/University of Peradeniya: Golden Jubilee Souvenir, 1942-1992. University of Peradeniya. 1992. பக். 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955580043X. 
  7. Sirima Kiribamune (1999). Women and Politics in Sri Lanka: A Comparative Perspective. International Centre for Ethnic Studies. பக். 51. 
  8. "Teaching Kandy's Heritage to Kandy's Children". The Kandy News இம் மூலத்தில் இருந்து 17 பிப்ரவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170217064054/http://www.kandynews.net/index.php/july-august-2013-editorial/379-teaching-kandy-s-heritage-to-kandy-s-children. பார்த்த நாள்: 9 January 2017. 
  9. "Profile of Ambassador Aruni Ranaraja". Embassy of Sri Lanka - Manila, The Philippines. http://www.slemb.ph/ambassador/. பார்த்த நாள்: 9 January 2017. 
"https://tamilar.wiki/index.php?title=சந்திரா_ரணராஜ&oldid=24748" இருந்து மீள்விக்கப்பட்டது