சத்யா (2017 திரைப்படம்)

சத்யா (Sathya) என்பது 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி என்பவர் இயக்கினார். சிபிராஜ், வரலட்சுமி சரத்குமார், மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர்.[1] இது சனம் எனும் தெலுங்குத் திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும்.

சத்யா
இயக்கம்பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புமகேஸ்வரி சிபிராஜ்
இசைசைமன் கே. கிங்
நடிப்புசிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், சதீஸ், ஆனந்தராஜ்
ஒளிப்பதிவுஅருண்மனி பழனி
படத்தொகுப்புகௌதம் ரவிச்சந்திரன்
கலையகம்நாதாம்பாள் பிலிம் பேக்டரி
வெளியீடுதிசம்பர் 8, 2017 (2017-12-08)
ஓட்டம்129 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

சத்யா (சிபிராஜ்) சிட்னி, ஆத்திரேலியாவில் வேலை செய்து வருகிறார். அப்போது அவரின் முன்னாள் காதலி சுவேதாவிடம் (ரம்யா நம்பீசன்) இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் தனக்கு உதவி வேண்டும் எனக் கேட்கிறார். இவர்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் ஒன்றாகப் பணி புரிந்தவர்கள். அப்போது இவர்கள் இருவரும் காதலித்தனர். ஆனால் சுவேதாவின் தந்தைக்கு இவர்களின் காதல் பிடிக்காமல் போகவே தொழில் முனைவோரான கௌதம் என்பவரைத் திருமணம் செய்து வைக்கிறார். தனது நண்பரின் சகோதரியின் திருமணத்திற்காக அவர் இந்தியா வருகிறார். இவர் பாபு கான் (சதீஸ்) என்பவரிடம் தானுந்தினை வாடகைக்கு எடுக்கிறார். தனது தங்கையின் விலாசத்தின் மூலமாக ஒரு சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறினைப் பெறுகிறார்.

சத்யா, சுவேதாவை ஒரு உணவகத்தில் வைத்து சந்திக்கிறார். அப்போது சுவேதாவின் ஐந்து வயது மகள் ரியா தொலைந்து போனதை சத்யா அறிகிறான். மேலும் கௌதமும் ( சுவேதாவின் கணவன்) சுவேதாவிற்கு உதவவில்லை என்பதனை அறிகிறான். கௌதமின் சகோதரன் பாபி போதைப்பொருளுக்கு அடிமையானவன் என்றும் அவன் அடிக்கடி சுவேதாவிற்கு தொல்லை கொடுப்பதையும் அறிகிறான். இரு ஆப்பிரிக்கா- அமெரிக்கா தொகுதி வேலையாட்களைப் பார்க்கிறான். அவர்கள் போதைப் பொருட்களைக் கடத்தும் வேலையைச் செய்கிறார்கள். பின் சத்யா, கௌதமைச் சந்திக்கிறான். அப்போது தங்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை என்றும், தனது மனைவி ஒரு விபத்தில் ஆழ்மயக்கம் நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் கூறுகிறான். அப்போதிலிருந்தே தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அதன் பெயர் ரியா என்பதாகவும் தினமும் உளறுவதாகக் கூறுகிறார்.

சத்யா இந்தச் சூழ்நிலைகளினால் குழப்பமடைகிறான். மேலும் பள்ளிக்கூடத்திற்கு எதிரே உள்ள மூடிய-மின்சுற்று தொலைக்காட்சியில் சுவேதா இரு மர்ம நபர்களால் தாக்கப்படுவதைப் பார்க்கிறான். ஆனால் அங்கும் ரியா இல்லை. எனவே சத்யா, சுவேதாவின் மனநிலையினைப் பற்றி சந்தேகமடைந்து சுவேதாவிடம் தனது சந்தேகத்தைத் தெரிவிக்கிறான். இதனால் மனமுடைந்த சுவேதா தற்கொலை செய்கிறார். பின் சத்யா, சுவேதாவின் வீட்டில் ஒரு உயரத்தை அளவிடுவதற்கான் குறியீடு இருப்பதைப் பார்க்கிறான். இந்த சமயத்தில் உதவித் தலைமை ஆணையர் அனுயா பரத்வாஜ் இந்த தற்கொலை வழக்கை விசாரணை செய்ய நியமனம் செய்யப்படுகிறார். பாபு , ரியாவினை பாபி கடத்துவதை தான் பார்த்ததாகக் கூறுகிறான். இதனால் பாபி கைது செய்யப்படுகிறான். ஆனால் சிறையில் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அனுயா பாபியை சுட்டுக் கொலை செய்கிறார்.

பின் ஒரு குழு சத்யாவைக் கொலை செய்ய வருகிறது. அதில் பாபு இறக்கிறார். கொலைகாரர்களின் செல்லிடத் தொலைபேசிக்கு பல்லூடக செய்திச் சேவை வருகிறது அதில் அனுயா சத்யாவைக் கொலை செய்யச் சொல்கிறார். இதனை அறிந்து அனுயாவின் வீட்டிற்கு சத்யா செல்கிறார். பின் ரியாவை கௌதம் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும் அதனால் அவளை தனது கட்டுப்பாட்டில் வைத்ததாகவும் கூறுகிறார். அனுயா சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். கௌதம் கைது செய்யப்படுகிறான். இறுதியில் ரியாவின் தந்தை கௌதம் இல்லை எனவும் சத்யா தான் உண்மையான தந்தை என்பதும் தெரிய வருகிறது.

தயாரிப்பு

ஏப்ரல் 2016 இல் சனம் எனும் தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மறூருவாக்கத்தின் உரிமையை சிபியின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி பெற்றது. அதனை இயக்க சைத்தான் (திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[2] நடிகையாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[3][4] மேலும் வரலட்சுமி சரத்குமார், சதீஸ், ஆனந்த் ராஜ் (நடிகர்) ஆகீயோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[5]

சான்றுகள்

வெளியிணைப்புகள்

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சத்யா (2017 திரைப்படம்)

"https://tamilar.wiki/index.php?title=சத்யா_(2017_திரைப்படம்)&oldid=33014" இருந்து மீள்விக்கப்பட்டது