சதீஷ் சிவலிங்கம்

சதீஷ் சிவலிங்கம் (Sathish Sivalingam, பிறப்பு: சூன் 23, 1992) 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள், 2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் ஆகியவற்றில் பாரம் தூக்குதல் – ஆடவர் 77 கிலோ போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குனர் ஆவார்.[2]

சதீஷ் சிவலிங்கம்
The President, Shri Pranab Mukherjee presenting the Arjuna Award for the year-2015 to Shri S. Sathish Kumar for Weightlifting, in a glittering ceremony, at Rashtrapati Bhavan, in New Delhi on August 29, 2015.jpg
பளு தூக்குதலுக்காக சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு 2015 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு23 சூன் 1992 (1992-06-23) (அகவை 32)
வேலூர், தமிழ்நாடு, இந்தியா
உயரம்1.75 m (5 அடி 9 அங்) (2014)
எடை76 kg (168 lb) (2014)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுபளு தூக்குதல்
நிகழ்வு(கள்)77 கிலோ
பயிற்றுவித்ததுதிரு.நாகராஜன்[1]
7 ஏப்ரல் 2018 இற்றைப்படுத்தியது.

இயற்வாழ்க்கை

வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் உள்ள அட்லஸ் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சதீஷ் சிவலிங்கம், 2007ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்து நாகராஜ் என்பவரிடம் பயிற்சி பெற்றார்.

விளையாட்டு வாழ்வு

  • பள்ளி, மாவட்ட, மாநில, தேசிய அளவில் சப்-ஜூனியர், ஜூனியர் என பல தங்க பதக்கங்களைக் குவித்த இவர், சீனியர் பிரிவுக்கு முன்னேறினார்.
  • 2011இல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய சீனியர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
  • 2011இல் தென்னக ரயில்வேயின் எழுத்தர் பணியில் சேர்ந்த இவர், 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகள் தங்கப் பதக்கம் வென்றார்.[3]
  • இசுக்கொட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில், சிவலிங்கம் 77 கிலோ வகைப்பாட்டில் தங்கப்பதக்கம் வென்றார்; இசுநாட்சில் 149 கிலோவும் கிளீன் & ஜெர்க்கில் 179 கிலோவுமாக மொத்தம் 328 கிலோ எடையைத் தூக்கி உள்ளார். இசுநாட்சில் 149 கிலோ தூக்கியது புதிய போட்டிச் சாதனையாகும்.[4][5]
  • ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டு நகரில் நடந்த 21வது பொதுநலவாய விளையாட்டுக்களில், சிவலிங்கம் 77 கிலோ வகைப்பாட்டில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றார்; இசுநாட்சில் 144 கிலோவும் கிளீன் & ஜெர்க்கில் 173 கிலோவுமாக மொத்தம் 317 கிலோ எடையைத் தூக்கினார்.[6]

பெற்ற விருதுகள்

மேற் சான்றுகள்

  1. "நாகராஜன் - பயிற்சியாளர்". http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article6260374.ece. பார்த்த நாள்: 29 சூலை 2014. 
  2. "Glasgow 2014 - Men's 77kg Group A". Glasgow 2014 இம் மூலத்தில் இருந்து 9 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140809002041/http://results.glasgow2014.com/event/weightlifting/wlm077a01/mens_77kg_group_a.html. பார்த்த நாள்: 27 July 2014. 
  3. "தென்னக ரயில்வேயில் எழுத்தர் பணி". http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/article6260374.ece. பார்த்த நாள்: 29 சூலை 2014. 
  4. "Glasgow 2014: Jack Oliver and Sarah Davies miss out on medals". BBC. 27 July 2014. http://www.bbc.com/sport/0/commonwealth-games/28513744. பார்த்த நாள்: 28 July 2014. 
  5. "காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர் சதீஸ் தங்கப்பதக்கம் வென்றார்!". விகடன் செய்திகள். 28 சூலை 2014 இம் மூலத்தில் இருந்து 2014-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140729001940/http://news.vikatan.com/article.php?module=news&aid=30659. பார்த்த நாள்: 28 சூலை 2014. 
  6. "கோல்டுகோஸ்டு 2018: சதிஸ் தங்கப்பதக்கம் வென்றார்". திஹிந்து தமிழ். 7 ஏப்ரல் 2018. http://tamil.thehindu.com/sports/article23463465.ece. பார்த்த நாள்: 7 ஏப்ரல் 2018. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சதீஷ்_சிவலிங்கம்&oldid=28178" இருந்து மீள்விக்கப்பட்டது