சண்பகம்
சண்பகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத: | மூவடுக்கி |
வரிசை: | மூவடுக்கிதழி |
குடும்பம்: | Magnoliaceae |
பேரினம்: | Magnolia |
இனம்: | M. champaca |
இருசொற் பெயரீடு | |
Magnolia champaca லி. |
சண்பகம் (Magnolia champaca) (சம்பங்கி)என்பது என்றும் பசுமையான பெரிய தாவரம் ஒன்றாகும். இது தெற்காசியா, தென்கிழக்காசியா, சீனாவின் சில பகுதிகள் என்பவற்றை உள்ளடக்கிய இந்தோமலாயா சூழலியல் வலயத்தைத் தாயகமாகக் கொண்டது.[1] மிகுந்த நறுமணம் கொண்ட மஞ்சள் அல்லது வெண்ணிறப் பூக்களுக்காக இது வெகுவாக அறியப்படுகிறது. எனினும், முதன்மையாக இது பயிரிடப்படுவது இதன் வெட்டு மரத்துக்காகவாகும். அவ்வாறே, இது நகர்ப்புற நிலவடிமைப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் கவர்ச்சியான சதைப்பகுதி கொண்ட பழங்கள் பறவைகளை வெகுவாகக் கவரக் கூடியன.[2]
வேற்றினங்கள்
சண்பகத்தில் களிம்பு நிறம் முதல் மஞ்சள்-செம்மஞ்சள் நிறம் வரையான வேறுபாடுகள் கொண்ட கலப்பினங்கள் உருவாக்கப்படுவதுண்டு.[3] தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளில் இதனை ஒத்த இனங்களுடன் கலந்துருவாக்கப்பட்ட கலப்பினங்கள் காணப்படுகின்றன.
பயன்பாடு
நறுமணம்
சண்பகப் பூக்கள் தென்கிழக்காசியாவிற் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவை முதன்மையாக வீடுகளில் அல்லது ஆலயங்களில் வழிபாடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமிகளும் பெண்களும் இதன் பூக்களை அழகுக்காகவும் இயற்கையான நறுமணத்துக்காகவும் தலையிற் சூடிக் கொள்வர். அறைகளில் இயற்கையான நறுமணம் திகழ்வதற்காக நீர் மேலிடப்பட்டு வைக்கப்படுவதுடன், மணவறைக் கட்டில்களிலும் மணமாலைகளிலும் இதன் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சண்பகம் என்பது மிகுந்த நறுமணத்தைக் கொண்ட ஓர் அரிய தாவரம். அதனாலேயே இது பெருமளவிற் பயன்படுத்தப்படுவதில்லை. தலையிற் சூடப்படும் போது இதன் தனியொரு பூவே சூடப்படுகிறது. சில வேளைகளிலேயே இது சிறிய கொத்தாகச் சூடப்படும். மிக அரிதாகவே இதனாற் செய்யப்பட்ட மாலைகள் அணியப்படுகின்றன. மணவறைக் கட்டில்களை அலங்கரிப்பதில் மல்லிகையும் உரோசாவும் போன்றே இதுவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் கொண்ட நீர்ப் பாத்திரங்கள் அறைகளில் வைக்கப்படுகின்றன. அழகு மிகுந்த இதனால், நறுமணத் தன்மை குறைந்த ஏனைய பூக்களுடன் சேர்த்து அலங்கரிக்கப்படுகிறது."[4]
சண்பகப் பூவின் நறுமணத்தின் காரணமாக இது 'களிப்புறு நறுமண மரம்' என்றும் அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் பல இல்ல நறுமணத் தயாரிப்பாளர்கள் சண்பகப் பூவைக் கொண்டு நறுமணப் பொருட்களைத் தயாரிக்கின்றனர்.
பயிரிடுதல்
சண்பகம் அழகுத் தாவரமொன்றாக அயன மண்டலப் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.
வெளித் தொடுப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-07-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140728222720/http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?452630.
- ↑ FRISCH, J.D. & FRISCH, C.D. - Aves Brasileiras e Plantas que as atraem, São Paulo, Dalgas Ecotec, 3rd. edition, 2005, ISBN 85-85015-07-1, page 374
- ↑ http://www.efloras.org/florataxon.aspx?flora_id=2&taxon_id=242332307
- ↑ Minter, S. "Fragrant Plants." in Prance, G. and M. Nesbitt. (2005). The Cultural History of Plants. London: Routledge. 242.This is great