சட்னா டைட்டஸ் (நடிகை)

சட்னா டைட்டஸ், 28 நவம்பர் 1991 கேரளாவைச் பூர்விகமாகக் கொண்ட, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை ஆவார். 2016 ம் ஆண்டில் வெளியான பிரபல தமிழ் திரைப்படமான பிச்சைக்காரன், திரைவாழ்க்கையில் முக்கியமான படமாகும்.

சட்னா டைட்டஸ் (நடிகை)
இயற்பெயர்/
அறியும் பெயர்
சட்னா டைட்டஸ்
பிறந்ததிகதி 28 நவம்பர் 1991 (1991-11-28) (அகவை 32)
பிறந்தஇடம் கொச்சி, கேரளா, இந்தியா
பணி திரைப்பட நடிகை
செயற்பட்ட ஆண்டுகள் 2015 ம் ஆண்டு முதல்
செயற்பட்ட ஆண்டுகள் 2015 ம் ஆண்டு முதல்
துணைவர் கார்த்திக்

திரைப்பட வாழ்கை

சட்னா டைட்டஸ், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமான குரு சுக்ரன் (2015) மூலம் தமிழ் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் சசி இயக்கிய விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் (2016) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பீட்சா விற்கும் கடையில் வேலை செய்யும் சுயாதீனமான பெண்ணாக சித்தரிக்கப்பட்ட டைட்டஸ், அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். தி ஹிந்து பத்திரிகையில் இத்திரைப்படத்தின் "புத்துணர்ச்சிக்கு காரணமானவர்" என்று தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.  சிபி டாட் காம் என்ற இணையதளத்தில் "மிகவும் அழகாக உள்ள கதாநாயகி, இயல்பான தோற்றத்தில், பக்கத்துவீட்டு பெண்ணைப்போல இருக்கிறார்"என்று பாராட்டியுள்ளது. [1] அந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் மிகவும் வெற்றிகரமான திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும், அதே நேரத்தில் அதன் மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்கு பதிப்பும் லாபகரமான வணிகத்தை செய்தது. [2] [3] இந்த படத்தின் வெற்றி, டைட்டஸை எய்தவன் (2017) மற்றும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் (2017) உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தது., மேலும் அவர் பிரபல இயக்குனர் அமீரின் சந்தான தேவன் (2018) படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். [4]

தனிப்பட்ட வாழ்க்கை

செப்டம்பர் 2016 இல், டைட்டஸ் தனது பிச்சைக்காரன் (2016) படத்தின் விநியோகஸ்தரான கார்த்திக் என்பவரை பதிவுத்திருமணம் செய்து கொண்டார். டைட்டஸின் பெற்றோர்கள் முதலில் கார்த்திக், டைட்டஸின் நடிப்பு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பதாகக் கூறி அவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தனர், அவரது பெற்றோரும், கணவரும் சமாதானமானதைத் தொடர்ந்து அந்த புகார் திரும்பப்பெறப்பட்டது. ஜனவரி 2017 இல் இருவருக்கும் அதிகாரப்பூர்வ திருமண விழா நடைபெற்றது, [5] [6]

திரைப்படவியல்

  • குறிப்பிடாத வரை அனைத்து படங்களும் தமிழில் எடுக்கப்பட்டவையே.
ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2016 பிச்சைக்காரன் மகிழினி அறிமுகப் படம்
2017 எய்தவன் எஸ்.ஐ., ஜனனி
2018 நீடி நாடி ஓகே கதா தர்மிகா தெலுங்கு படம்
2019 திட்டம் போட்டு திருடுற கூட்டம் அஞ்சலி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சட்னா_டைட்டஸ்_(நடிகை)&oldid=22648" இருந்து மீள்விக்கப்பட்டது