சடகோபர் அந்தாதி
சடகோபர் அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். கம்பரின் ஒன்பது படைப்புகளுள் ஒன்றான இந்நூல் அந்தாதி சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் பாட்டுடைத் தலைவர் சடகோபர் என அழைக்கப்பட்ட நம்மாழ்வார். சிறப்புப் பாயிரம் தவிர்த்து இதில் நூறு பாக்கள் உள்ளன. கம்பர் எழுதிய மற்றொரு அந்தாதி நூல் சரசுவதி அந்தாதி.