சஞ்சீவ் (தமிழ் நடிகர்)

சஞ்சீவ் (Sanjeev) ஒரு தமிழ்த் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் ஆவார். சன் தொலைக்காட்சியின் தமிழ் நாடகத் தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இவர் திருமதி செல்வம் (2007-2013) என்ற நாடகத் தொடாில் நடித்தார். அதில் அவர் அபிதாவுக்கு ஜோடியாக நடித்தார். பல படங்களில் விஜயின் நண்பராகவும் நடித்தார்.

சஞ்சீவ்
பிறப்புசஞ்சீவ்
பணிதமிழ் தொலைக்காட்சி நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1989 – தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
பிரீத்தி சீனிவாசன் (2009 – தற்போதுவரை)
பிள்ளைகள்லயா

வாழ்க்கை

சஞ்சீவ் பல திரைப்படங்களில் விஜயின் நண்பராக நடித்துள்ளாா். அவர் 2002 ஆம் ஆண்டில் மெட்டிஒலி தொலைக்காட்சி தொடரில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்து தொலைக்காட்சித் துறையில் நுழைந்தார். பல எதிர்மறை, இயல்புக் கதாபாத்திரங்களில் நடித்த பிறகு, திருமதி செல்வம் (2007-2013) என்ற தொடாில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்தாா். அவர் அந்த நிகழ்ச்சியில் அபிதாவுடன் நடித்தார், அது எஸ். குமரன் இயக்கத்தில் விகடன் டெலிவிஸ்டாசு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 2009 இல் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருதும் திருமதி செல்வத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான சன் குடும்பம் விருதும் பெற்றாா்.

தொலைக்காட்சி

தொலைக்காட்சித் தொடர் ஆண்டு தொலைக்காட்சி Description
நம்பிக்கை 2001-2003 சன் தொலைக்காட்சி துணைக் கதாபாத்திரம்
மெட்டி ஒலி 2002-2005 சன் தொலைக்காட்சி எதிர்மறைக் கதாபாத்திரம்
அண்ணாமலை 2002-2005 சன் தொலைக்காட்சி எதிர்மறைக் கதாபாத்திரம்
தற்காப்புக் கலை தீராத 2003-2007 சன் தொலைக்காட்சி எதிர்மறைக் கதாபாத்திரம்
ஆனந்தம் 2003-2009 சன் தொலைக்காட்சி துணைக் கதாபாத்திரம்
அகல்யா 2004-2006 சன் தொலைக்காட்சி துணைக் கதாபாத்திரம் / எதிர்மறைக் கதாபாத்திரம்
மனைவி 2004-2006 சன் தொலைக்காட்சி எதிர்மறைக் கதாபாத்திரம்
வேப்பிலைக்காரி 2005-2007 சன் தொலைக்காட்சி சமூக-புராண நாடகம்
பெண் 2006 சன் தொலைக்காட்சி எதிர்மறைக் கதாபாத்திரம்
திருமதி செல்வம் 2007-2013 சன் தொலைக்காட்சி அபிதாதாவுடன் முதன்மைக் கதாபாத்திரம்
மானாட மயிலாட 2007-2015 கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளர்
ரேகா IPS 2008-2010 கலைஞர் தொலைக்காட்சி துணைக் கதாபாத்திரம்
மணிக்கூண்டு 2008 சன் தொலைக்காட்சி முதன்மைக் கதாபாத்திரம்
கலசம் 2008-2009 சன் தொலைக்காட்சி துணைக் கதாபாத்திரம்
சிவசக்தி 2008-2009 சன் தொலைக்காட்சி எதிர்மறைக் கதாபாத்திரம்
விளக்கு வச்ச நேரத்திலே 2009-2011 கலைஞர் தொலைக்காட்சி சுஜிதாவுடன் முதன்மைக் கதாபாத்திரம்
இதயம் 2009-2012 சன் தொலைக்காட்சி முதன்மைக் கதாபாத்திரம்
அவள் 2011-2013 விஜய் தொலைக்காட்சி முதன்மைக் கதாபாத்திரம்
துளசி 2011-2013 ஜீ தமிழ் முதன்மைக் கதாபாத்திரம்
கறை 2014 சன் தொலைக்காட்சி முதன்மைக் கதாபாத்திரம்
யாரடி நீ மோகினி 2017-2018 ஜீ தமிழ் முதன்மைக் கதாபாத்திரம்
கண்மணி 2018 - ஜீ தமிழ் முதன்மைக் கதாபாத்திரம்

திரைப்பட வரலாறு

ஆண்டு திரைப்படம் மொழி கதாபாத்திரம் விளக்கம்
1989 பொன்மன செல்வன் தமிழ் கவுண்டமணியின் மகனாக
1995 சந்திரலேகா தமிழ் விஜய் நண்பனாக
1998 நிலாவே வா தமிழ் விஜய் நண்பனாக
2001 பத்ரி தமிழ் விஜய் நண்பனாக
2002 என் மன வானில் தமிழ் துணை கதாபாத்திரம்
2003 புதிய கீதை தமிழ் லாரன்சு விஜய் நண்பனாக
2006 நெஞ்சிருக்கும் வரை (2006) தமிழ் துணைக் கதாபாத்திரம்
2009 பாலைவனச் சோலை (2009) தமிழ் முதன்மைக் கதாபாத்திரம்

விருதுகளும் தகைமைகளும்

ஆண்டு விருது வகை நிலை கதாபாத்திரம்
2008 விவல் சின்னத்திரை விருது[1] சிறந்த நடிகர் வென்றவர் செல்வம் - திருமதி செல்வம்
2009 தமிழ்நாடு மாநில தொலைக்காட்சி விருது சிறந்த நடிகர் வென்றவர் செல்வம் - திருமதி செல்வம்
2010 சன் குடும்பம் விருதுகள் சிறந்த நடிகர் வென்றவர் செல்வம் - திருமதி செல்வம்
2011 Big FM தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நடிகர் வென்றவர் செல்வம் - திருமதி செல்வம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சஞ்சீவ்_(தமிழ்_நடிகர்)&oldid=21711" இருந்து மீள்விக்கப்பட்டது